மழை தட்டி எறியப்போகுது.. 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
கோவை: தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டகளில் நாளையும், நாளை மறு நாளும் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மழை
தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கோடை வெயில் வாட்டி வந்தது. இதனால், பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியதால் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
தெற்கு கொங்கன் கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவியது. இது வடக்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, வலுவடையக்கூடும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, வடக்கு திசையில் நகர்ந்து சென்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இது தொடர்ந்து, கிழக்கு திசை நோக்கி நகர்வதாகவும், இன்றே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் ரத்தினகிரிக்கும், டபோலிக்கும் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்ற அளவிலேயே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 28 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.
ரெட் அலர்ட்
இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள சில பகுதிகளுக்கு இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் நாளையும், நாளை மறு நாளும் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) May 24, 2025
இன்று (மே 24), நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகளில் மிக கன மழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று (மே 24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (மே 25) மற்றும் நாளை மறுநாள் (மே 26) நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை, நாளை மறுநாள் ரெட் அலர்ட்
நாளை (மே 25) மற்றும் நாளை மறுநாள் (மே 26) தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகளுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருப்பூர், திண்டுக்கல், உள்ளிட்ட இரண்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் மஞ்சள் அலர்ட் விடுக்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும் மே 27 ஆம் தேதி கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஆகிய 2 மாவட்டங்களில் மே 27ம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை கரையை கடக்க இருக்கக் கூடிய நிலையில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர் காட்டுப்பள்ளி, கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 7 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவையில் மாற்றம்.. பல ரயில்கள் ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு -
கோயம்புத்தூர் மக்களுக்கு குட்நியூல்.. அமைச்சர் விக்னேஷ் அதிரடி நடவடிக்கை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து












Click it and Unblock the Notifications