"ரெட்" தக்காளி.. சென்னையில் சம்பவம் ஸ்டார்ட்.. கொட்டி தீர்க்க போகுது கனமழை.. வெதர்மேன் பரபர அலர்ட்
Subscribe to Oneindia Tamil
சென்னை: கடந்த சில நாட்களாகவே சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதற்கிடையே மழை மேகங்கள் கடல் காற்றுடன் மோத உள்ளதால் இன்றும் சென்னையில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்திலும் விளக்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. கோடைக் காலம் முடிந்தது முதலே பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.

குறிப்பாகச் சென்னையிலும் மழை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் வெப்பம் குறைவதால் சென்னை மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழ்நாடு வெதர்மேன்: இதற்கிடையே இன்று மழை மேகங்கள் கடல் காற்றுடன் மோத உள்ளதால் இன்றும் சென்னையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.. இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இமேஜ் உடன் விளக்கியுள்ளார்.

இது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில், "KTCC (காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை) ரெட் தக்காளிக்கு (அதிக மழையை குறிக்கும் சொல்) தயாரா? புயல் மற்றும் கடல் காற்று சந்திக்க போகுறது. அதன் பிறகு சம்பவம் தான்.. சென்னை (கேடிசிசி), வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், பாண்டிச்சேரி மற்றும் தெற்கே சிவகங்கை, மதுரை மற்றும் புதுக்கோட்டை பெல்ட்களுக்கு வெப்பமான நாள்.

அதேபோல அவர் சற்று நேரத்திற்கு முன்பு தென் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை மேகங்கள் உள்ளதாகவும் அங்கெல்லாம் மழை கொட்டும் என பதிவிட்டுள்ளார். அதேபோல காஞ்சிபுரம் பகுதியிலும் மழை கொட்டி வருவதாக அவர் பதிவிட்டுள்ளார்.
வானிலை மையம்: முன்னதாக வரும் நாட்களில் நிலவும் வானிலை தொடர்பாகச் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று ஜூலை 7 மற்றும் ஜூலை 8 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூலை 9 முதல் ஜூலை 12 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூலை 13ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை கிளைமேட்: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை மற்றும் இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35°-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications