Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனசே பதறுது.. 56 அடி பள்ளத்தில் 80 மணி நேரமாக தவிக்கும் உயிர்கள்.. என்னதான் நடக்கிறது வேளச்சேரியில்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டிய மழை வெள்ளம் காரணமாக வேளச்சேரியில் கட்டுமான பணிக்காக தோண்டிய 56 அடி பள்ளத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் 4 நாட்களாக சிக்கித் தவித்து வருகின்றனர்.

சென்னை வெள்ளத்தால் மாநகர மக்கள் முழுவதும் திக்குமுக்காடி உயிரை காக்கவும், உணவுக்கும், குடிநீருக்கும் அலைமோதிக்கொண்டு இருக்கும் வேளையில், சென்னை வேளச்சேரியில் 56 அடி பள்ளத்தில் சிக்கி சில உயிர்கள் ஊசலாடிக்கொண்டு இருக்கின்றன. வேளச்சேரி ஐந்து பரலாங் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கு அருகே அடுக்குமாடி கட்டிட கட்டுமானப் பணியின்போது திடீரென 56 அடியில் பள்ளம் விழுந்தது. கட்டுமானப் பணி நடைபெற்று வந்த அடுக்குமாடிக் கட்டிடமும் பள்ளத்தில் சரிந்தது.

 Rescue work in Chennai Velachery to save workers have been stuck for 4 days in 56 feet trench

விபத்து நடந்தது எப்படி?: 56 அடியில் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றபோது மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்து வெள்ளம் வந்ததால் அதன் அருகே கட்டிடம் சரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ராட்சத பள்ளத்தில், பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இதில் 2 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். மேலும் சில தொழிலாளர்கள் பள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடி வருகிறார்கள். அவர்களின் எண்ணிக்கை 2 முதல் 7 ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. சரியாக எத்தனை தொழிலாளர்கள் என்பது உறுதிபடுத்தப்படவில்லை.

விபத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பரபரப்பான சாலையில் பச்சை நிற திரை அமைத்து மீட்புப் படையினர் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் மீட்பு பணி என்ன நிலையில் உள்ளது என்ற தெளிவான விபரம் கிடைக்கவில்லை. மோசமான வானிலை, வெள்ளம் காரணமாக மீட்புப் பணியில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு உள்ளன. தீயணைப்பு படையினர், மீட்புப் படையினர் 4 வது நாளாக மீட்புப் பணி மேற்கொண்டு வருகிறார்கள். பள்ளத்தில் நிரம்பி இருந்த தண்ணீரை பம்புகள் மூலம் வெளியேற்றி அவர்களை மற்றொரு பள்ளம் தோண்டி மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.

மீட்பு பணியில் தடங்கல்: பள்ளத்தில் நீரை வெளியேற்றினாலும் அங்கு ஊற்றுபோல் நீர் நிரம்பிவிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. 80 மணி நேரத்துக்கும் மேலாகியும் தொழிலாளர்கள் மீட்கப்படாத நிலையில் அவர்களின் உடல் நிலை குறித்த கவலை எழுந்து இருக்கிறது. பள்ளத்தில் சிக்கி இருக்கும் தொழிலாளர்கள் கடந்த இத்தனை நாட்களாக உணவு, குடிநீர் இன்றி எப்படி சமாளிக்கிறார்கள்? என்ன நிலையில் உள்ளார்கள்? சுவாசிப்பதற்கு வழி இருக்கிறதா? என்ற கேள்விகள் எழுகின்றன.

பள்ளத்தில் சிக்கி இருப்பவர்களின் உறவினர்கள் அங்கு திரண்டு கதறி அழும் காட்சிகள் காண்போரின் காதுகளை கிழித்து கலங்க வைத்து வருகின்றன. சம்பவ இடத்திற்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டு மீட்புப் பணிகள் தொடர்பாக கேட்டறிந்தனர். அப்பகுதியில் பொதுமக்கள் கூட்டமும் அதிகரிப்பதால் போலீசார் அவர்களை பள்ளத்துக்கு அருகே செல்ல விடாமல் தடுத்து வருகிறார்கள்.

துர்நாற்றம்: இதற்கிடையே தொழிலாளர்கள் சிக்கிய பள்ளத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் செய்திகள் வெளியாகி குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்து உள்ளன. மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று இரவுக்கும் பள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைவரும் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஏன் திரை?: உள்ளே நடக்கும் மீட்பு பணிகளை கேமராவில் பதிவு செய்ய முடியாத அளவுக்கு சுற்றிலும் பச்சை நிற திரை போடப்பட்டுள்ளதால் உள்ளே நடப்பது உலகிற்கு தெரியவில்லை. ஆனால், மீட்பு பணியின்போது திடீரென பக்கவாட்டு மணல் சரியக்கூடும் என்பதால் இப்படி வலை மாதிரி திரை போட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+