இரவு பேய் மழை இருக்கு.. அடுத்த 2 மணி நேரம் உஷார்! 13 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உள் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இரவு பரவலாக மழை பெய்து பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மொத்தம் 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை பறந்திருக்கிறது.

இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில் கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களுக்கு இரவு 10 மணி வரை மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

RMC issues alert

தற்போது வேலூர், மதுரை, திருவாரூர் மாவட்டத்தின் திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகள், தென்காசியின் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இப்படி இருக்கையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை கவனம் பெற்றிருக்கிறது.

முன்னதாக இன்று மதியம் வானிலை அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதில், சுமார் 7.6 கிமீ உயரத்தில் கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது என்றும், சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது எனவும், நேற்று தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவிய பலவீனமான காற்றழுத்தத்தாழ்வுப் பாதை (Feeble Trough) மேல் குறிப்பிட்ட காற்றழுத்த தாழ்வு பாதையுடன் இணைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சரி இந்த காற்றழுத்த தாழ்வு பாதை, வளிமண்டல சுழற்றி ஆகியவற்றால் மழை பெய்யுமா? என்று மக்கள் எதிர்பார்த்திருந்தனர். இதற்கு விளக்கமளித்திருந்த வானிலை மையம், இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

RMC issues alert: The Chennai Regional Meteorological Centre has issued a warning of widespread rainfall tonight across most parts of the interior of Tamil Nadu. A total of 12 districts are covered by this alert.RMC issues alert for 13 districts; heavy to extremely heavy rain forecast in Tamil Nadu

Tamil Nadu rain alert 13 districts, RMC red alert Villupuram Chengalpattu Cuddalore Mayiladuthurai, orange alert Chennai 11 districts, heavy rain Tamil Nadu today, Tamil Nadu weather alert September 2026, Tamil Nadu rainfall warning 2026, northeast monsoon Tamil Nadu, heavy rain alert Tamil Nadu, RMC Chennai weather update, Tamil Nadu red alert districts, Tamil Nadu orange alert districts, heavy rain next 2 hours

rain, tamil nadu, வானிலை

இரவு பேய் மழை இருக்கு.. அடுத்த 2 மணி நேரம் உஷார்! 13 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்!

சென்னை: உள் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இரவு பரவலாக மழை பெய்து பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மொத்தம் 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை பறந்திருக்கிறது.

இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில் கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களுக்கு இரவு 10 மணி வரை மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது வேலூர், மதுரை, திருவாரூர் மாவட்டத்தின் திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகள், தென்காசியின் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இப்படி இருக்கையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை கவனம் பெற்றிருக்கிறது.

முன்னதாக இன்று மதியம் வானிலை அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதில், சுமார் 7.6 கிமீ உயரத்தில் கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது என்றும், சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது எனவும், நேற்று தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவிய பலவீனமான காற்றழுத்தத்தாழ்வுப் பாதை (Feeble Trough) மேல் குறிப்பிட்ட காற்றழுத்த தாழ்வு பாதையுடன் இணைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சரி இந்த காற்றழுத்த தாழ்வு பாதை, வளிமண்டல சுழற்றி ஆகியவற்றால் மழை பெய்யுமா? என்று மக்கள் எதிர்பார்த்திருந்தனர். இதற்கு விளக்கமளித்திருந்த வானிலை மையம், இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+