வாரி சுருட்டிய மழை.. 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு லீவு! உங்க ஊரு இருக்கானு செக் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென் தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மழை தீவிரமடையும் என்பதால் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மேற்கு நோக்கி அரபிக்கடல் பக்கம் நகர்ந்து வருகிறது. இது கடந்து செல்லும் பாதை முழுவதும் மழையை பொழிந்து சென்றிருக்கிறது. இடையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இது வலுவடைந்ததால் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மிக கனமழையை பெய்து தள்ளியது. இன்றும் நெல்லை, தென்காசியில் கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் தேங்கியிருக்கிறது. எனவே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

schools rain

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடியில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், விழுப்புரம், திருச்சி மற்றும் தேனியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கனமழை காரணமாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. நெல்லையில் முக்கிய அணைகளிலிருந்து உபரிநீர் அப்படியே திறந்துவிடப்படுவதால் மக்கள் குடியிருப்பு பகுதியில் நீர் வெள்ளமாக தேங்கியிருக்கிறது.

நேற்றிரவு நிலவரப்படி, 1.ராம நதி அணை
கொள்ளளவு: 81.5 அடி/84 அடி
வரத்து மற்றும் வெளியேற்றம்:2150/2150 கனஅடி

2.கடனா அணை
கொள்ளளவு: 80 அடி/85 அடி
வரத்து மற்றும் வெளியேற்றம்: 20398/20398 கனஅடி

3.அடவினைனார் அணை
கொள்ளளவு: 76 அடி/132 அடி
வரத்து மற்றும் வெளியேற்றம்: 229/10 கனஅடி

4.கருப்ப நதி அணை
கொள்ளளவு: 67.59 அடி/72 அடி
வரத்து மற்றும் வெளியேற்றம்: 1300/1300 கனஅடி

5.குண்டயாறு அணை
கொள்ளளவு: 36 அடி/36 அடி
வரத்து மற்றும் வெளியேற்றம்: 325/325 கனஅடி

நீர் வெளியேற்றம் காரணமாக சம்பங்குளத்தில் நீர் கழுத்தளவுக்கு தேங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+