அனலை கக்கும் வெயில்.. தமிழகத்தில் 15 இடங்களில் சதம்.. அதிகபட்ச வெப்பம் எங்கே தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் மீண்டும் வெயில் தன் கோர முகத்தை காட்ட தொடங்கியுள்ளது. இன்று 15 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கம் மற்றும் திருத்தனியில் 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 20 ஆம் தேதி முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனால் கோடை வெயிலில் தகித்து கொண்டிருந்த தமிழகம் சற்று குளிந்து காணப்பட்டது. கடந்த 25 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்தது.

ஆனால் அதன் பிறகு குறிப்பாக நேற்று முன்தினம் முதல் மீண்டும் வெயில் வெளுக்க தொடங்கியது. குறிப்பாக சென்னையில் வெயில் வாட்டி வதைக்க தொடங்கியது. மீனம்பாக்கம் மற்றும் நுங்கம்பாக்கத்தில் நடப்பு ஆண்டின் அதிகபட்ச வெயில் பதிவாகியது. இதேபோல் பல்வேறு இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது.
நேற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் இன்றும் தமிழ்நாட்டில் 15 இடங்களில் வெயில் சதம் அடித்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று அதிகபட்சமாக திருத்தணியில் 108.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. இதேபோல் சென்னையில் மீனம்பாக்கத்தில் 108.42 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது.
வேலூரில் 106.7 டிகிரி பாரன்ஹீட்டும், மதுரையில் 104.36 டிகிரி பாரன்ஹீட்டும், சென்னை நுங்கம்பாக்கத்தில் 104.18 டிகிரி பாரன்ஹீட்டும் பதிவானது. இதற்கு அடுத்ததாக பரங்கிப்பேட்டையில், 104.18 டிகிரி பாரன்ஹீட், ஈரோட்டில் 103.67 டிகிரி பாரன்ஹீட், நாகப்பட்டினம் - 103.46 டிகிரி பாரன்ஹீட், கடலூர் - 103.28 டிகிரி பாரன்ஹீட், திருச்சி - 102.38 டிகிரி பாரன்ஹீட், தஞ்சாவூர் - 102.2 டிகிரி பாரன்ஹீட்,
தொண்டி - 101.12 டிகிரி பாரன்ஹீட், திருப்பத்தூர் - 100.76 டிகிரி பாரன்ஹீட், கரூர் - 100.4 டிகிரி பாரன்ஹீட், தூத்துக்குடி - 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. இது போக புதுச்சேரியில் 104 டிகிரி பாரன்ஹீட்டும், காரைக்காலில் 100.58 டிகிரி பாரன்ஹீட்டும் வெப்பநிலை பதிவானது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications