குற்றால அருவிகளில் சென்சார் கருவி! சென்னை ஐஐடி குழுவினர் அசத்தல்! எங்கே பொருத்தப்படுகிறது?
சென்னை: தென்காசி மாவட்டத்தில் திடீர் வெள்ளப்பெருக்கால் சிறுவன் உயிரிழந்த நிலையில் குற்றால அருவிகளில் சென்சார் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளுக்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். மழை காலங்களில் இந்த குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்தும் கொட்டும்.

இதனால் சுற்றுலா பயணிகளின் கோடை சாய்ஸில் குற்றாலம் எப்போதும் இருக்கும். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக கோடை வெயில் கொளுத்தி எடுத்து வந்ததால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்காக வந்து ஏமாற்றமடைந்தனர்.
இந்த நிலையில் சில நாட்களாக நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் குற்றால அருவிகளில் நீரானது , வெள்ளியை உருக்கியது போல் வந்து விழுகிறது. இந்த நிலையில் நேற்று தென்காசி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய தினம் புதிய குற்றால அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இதனால் சுற்றுலா பயணிகள் பழைய குற்றால அருவிக்கு சென்று குளித்து மகிழ்ந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பழைய குற்றால அருவியில் திடீரென அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் நெல்லையை சேர்ந்த 17 வயசு சிறுவன் உயிரிழந்தார். இதையடுத்து குற்றால அருவிகளில் மறுஅறிவிப்பு வரும் வரை குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பழைய குற்றால அருவி, பிரதான அருவி, ஐந்தருவியில் ஐந்தருவி மட்டும் தற்போது வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. நீர் வரத்து கண்காணிப்பு, உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் பிரதான அருவி, பழைய அருவி ஆகிய இரு அருவிகளையும் வனத்துறையினர் வசம் ஒப்படைக்க மாவட்டம் நிர்வாகம் சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது பொதுப் பணித் துறை , மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த இரு அருவிகளும் அடுத்த இரு தினங்களுக்குள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த நிலையில் குற்றால அருவிகளில் திடீர் காட்டாற்று வெள்ளத்தை கண்காணிக்க சென்சார்கள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அதற்கான பணிகள் விரைவில் நடைபெறவுள்ளது.
சென்சார் அமைப்பதற்காக சென்னை ஐஐடி பேராசிரியர் தலைமையிலான சிறப்பு குழு அமைக்கப்பட்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு அருவி பகுதியில் ஆய்வு செய்தனர். இந்த குழு தயாரித்த சென்சார் கருவிகளை அருவிகளின் மேற்பகுதிகளில் பொருத்த தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. வெள்ளம், கனமழை குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் வகையில் இந்த சென்சார் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications