திருநெல்வேலி, தென்காசி பகுதிகளில் நிற்கவே இல்லை.. வரலாற்று மழை உறுதி.. தமிழ்நாடு வெதர்மேன் பதிவு
திருநெல்வேலி : திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசியில் நேற்று இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குற்றாலம் அருவியில் மிகப்பெரிய வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. மணிமுத்தாறு பகுதிகளிலும், மாஞ்சோலை பகுதிகளிலும், திருநெல்வேலியிலும் இடைவிடாமல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. திருநெல்வேலி பகுதியில் பெய்து வரும் மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. தனியார் வானிலை ஆய்வாளர்களும் கூறியிருந்தனர். அவர்கள் கூறிய படியே வடகிழக்கு பருவமழையின் 4ம் சுற்று மழை தீவிரம் அடைந்துள்ளது. நேற்று வடகடலோர மாவட்டங்களைவிட, தென் மாவட்டங்களில் தான் மழை கடுமையாக இருந்தது. நேற்று காலையில் தொடங்கிய மழை நேற்று இரவெல்லாம் வெளுத்து வாங்கியது. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை கடுமையாக இருந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று அதிகாலை லேசான சாரலாக ஆரம்பித்த மழை ,காலை 7 மணிக்கு மேல் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மாறியது. சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் புரட்டி எடுத்தது. பகல் எல்லாம் அதன்பிறகு சாரல் மழை பெய்த நிலையில், மாலையில் மீண்டும் வெளுத்து வாங்க ஆரம்பித்தது. இரவு முழுவதும் கனமழை கொட்டித்தீர்த்தது. பல இடங்களில் 20 முதல் 30 செமீ மழை பெய்துள்ளது. சில இடங்களில் 40 செமீ மழை வரை பெய்திருக்கிறது.
வெறும் 24 மணி நேரத்தில் தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிக கடுமையான மழையை சந்தித்துள்ளதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. தாமிரபரணி ஆறு கரைபுரண்டு ஓடுகிறது. குற்றாலம் அருவியில் ஏற்பட்ட வெள்ளத்தை பார்த்தால் நடுங்கி போவார்கள்.. அந்த அளவிற்கு ஆக்ரோஷமாக வெள்ளம் பாய்ந்தோடுகிறது.
இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், தமிழ்நாட்டிலேயே கடுமையாக மழை பெய்த தென்காசி மாவட்டத்தில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படவில்லை. மதியத்திற்கு பிறகு கனமழை கடுமையான பின்னரே விடப்பட்டது. இதனிடையே தமிழ்நாடு வெதர்மேன் திருநெல்வேலி பகுதியில் பெய்து வரும் மழை குறித்து நள்ளிரவில் பதிவிட்ட பதிவில், திருநெல்வேலி, தென்காசி பகுதிகளில் மழை நிற்கவே இல்லை. இந்தப் பகுதிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க மழை பெய்து வருகிறது. மாஞ்சோலை மலைப்பகுதியில் வரலாற்று மழையாக இருக்கும். திருநெல்வேலி பகுதியில் மழை 200 மி.மீட்டரை தாண்டிவிட்டது. மணிமுத்தாறு அணை பகுதியில் மழை 300 மி.மீட்டரை தாண்டியது. மாஞ்சோலையில் 400 மி.மீ தாண்டும்.

டெல்டா பகுதியை பொறுத்தவரை மயிலாடுதுறை-கும்பகோணம்-அரியலூர் பகுதிகளில் 150-200 மிமீ மழை பெய்துள்ளது. மணிமுத்தாறு அணைக்கு அதிகளவு நீர்வரத்து எதிர்பார்க்கப்படுகிறது. குற்றாலம் வரலாற்று சிறப்பு மிக்க மழையை பார்க்கிறது.
-
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications