இங்கெல்லாம் ரொம்ப கவனமாக இருங்க.. மழை இன்று வெளுக்க போகிறதாம்.. வானிலை மைய ஹிட் லிஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் இன்று பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 Some parts of Tamil Nadu to heavy to slight rain today says Weather Department

05.10.2023 முதல் 09.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரிய இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை வட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
குருந்தன்கோடு (கன்னியாகுமரி) 13. நாகர்கோயில் (கன்னியாகுமரி) 10. கன்னியாகுமரி, கொட்டாரம் (கன்னியாகுமரி) அடையாமடை (கன்னியாகுமரி), (கன்னியாகுமரி), இரணியல் (கன்னியாகுமரி), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), அணைகெடங்கு மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), மைலாடி (கன்னியாகுமரி) தலா 7. பாலமோர் (கன்னியாகுமரி), பூதப்பாண்டி (கன்னியாகுமரி). முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி) தலா 6, குழித்துறை (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி), திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி) தலா 5, சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), குளச்சல் (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி), சிவலோகம் (கன்னியாகுமரி) தலா 4, சின்கோனா (கோயம்புத்தூர்), சோலையார் (கோயம்புத்தூர்), ஆரல்வாய்மொழி (கன்னியாகுமரி), சிற்றாறு-1 (கன்னியாகுமரி), கன்னிமார் (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), சுருளக்கோடு (கன்னியாகுமரி), திற்பரப்பு (கன்னியாகுமரி), குண்டாறு அணை (தென்காசி), காக்காச்சி (திருநெல்வேலி) தலா 3, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), முக்கடல் அணை (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி), தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்). வட்டானம் (ராமநாதபுரம்), நாலுமுக்கு (திருநெல்வேலி) தலா 2, பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), பெருஞ்சாணி அணை (கன்னியாமைரி), கடனா அணை (தென்காசி), பெரியாறு (தேனி). தேக்கடி (தேனி), கொமெடியாறு அணை (திருநெல்வேலி), ஊத்து (திருநெல்வேலி), பாபநாசம் (திருநெல்வேலி), ராதாபுரம் (திருநெல்வேலி) தலா 1.
மீனவர்களூக்கான எச்சரிக்கை;
தமிழக கடலோரப்பகுதிகள்:
03.10.2023 மற்றும் 04.10.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

குமரிக்கடல் பகுதிகளில் கறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

06.10.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:
03.10.7023: மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை வட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:
03.10.2023 மற்றும் 04.10.2023; தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+