முன்கூட்டி இன்றே தொடங்கியது தென்மேற்கு பருவமழை! ஹை அலர்ட்டில் கேரளம், தென் தமிழகம்
டெல்லி: தெற்கு அந்தமான் மற்றும் மாலத்தீவுகள் பகுதிகளில் தென் மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்ட எக்ஸ் வலை தள பதிவில் கூறியிருப்பதாவது: தெற்கு வங்கக் கடல், குமரி கடல், நிகோபார் தீவுகள், தெற்கு அந்தமான், மாலத்தீவு கடல் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் கடல் பகுதியில் மேற்கு திசையிலிருந்து வீசும் காற்றின் பலம் அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அந்தமான நிகோபார் தீவுகளில் பரவலாக மழை பெய்தது. மேக மூட்டமும் அதிக அளவில் இருக்கின்றன. கடல் மட்டத்திற்கு மேல் தென்மேற்கு திசை காற்று 4.5 கி.மீ. உயரத்திற்கு வீசுகிறது. இந்த காரணிகளை எல்லாம் வைத்து பார்க்கும் போது மாலத்தீவுகள், குமரி கடல், தெற்கு வங்கக் கடல், தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்றைய தினம் தென் மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது.
தென் மேற்கு பருவமழை வரும் 31 ஆம் தேதி தொடங்கும் என சொல்லப்பட்டது. இதையடுத்து இன்று தொடங்கும் என சொல்லப்பட்ட நிலையில் 36 மணி நேரத்தில் தொடங்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்திய வானிலை மையத்தின் கணிப்பின்படி தற்போது பருவமழை தொடங்கிவிட்டது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதலே தமிழகம் முழுவதும் வெப்பம் வாட்டி வதைத்தது. பல்வேறு இடங்களில் 100 டிகிரியை கடந்த வெயில் சுட்டெரித்தது. வெப்ப அலைகள் குறைந்து ஒரு சில பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது.
தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த மழையே தென் மேற்கு பருவமழையின் தொடக்கம்தான் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் தென் மேற்கு பருவமழை வரும் மே 31 ஆம் தேதி கேரளாவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.
தென் மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும். ஆனால் இந்த முறை ஒரு நாளைக்கு முன்னதாக மே 31 ஆம் தேதி தொடங்கும் என தெரிவித்திருந்தது. இந்த பருவமழை இந்தியாவில் விவசாயத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் இந்த பருவமழை பெய்யும்.
தென்மேற்கு திசையில் இருந்து வீசும் காற்று ஜூன் மாதத்தில் கேரளாவுக்கு மழையாக வரும். இது செப்டம்பர் இறுதி வரை நீடிக்கும். இது முடிந்தவுடன் வடகிழக்கு பருவமழை தொடங்கும். இந்த நிலையில் இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை இயல்பை விட அதிக மழைப் பொழிவை எதிர்பார்க்கலாம் என சொல்லப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட தென் மேற்கு பருவழை 4 நாட்கள் தாமதமாக தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாளையே தென் மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது 36 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், பத்தனம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று வரை பெரும்பாலான மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications