Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 மணி நேரம்.. ஊரெல்லாம் மழைநீர்.. விடாம தண்ணி காட்டிய கனமழை.. சென்னை மக்களை பதற வைத்த சாலைகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கனமழை சுமார் 3 மணி நேரமாக கொட்டித் தீர்த்த நிலையில், சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கின. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மழை ஓய்ந்ததுமே சென்னை மாநகராட்சி ஊழியர்கள், மழைநீரை அகற்றும் பணிகளை வேகப்படுத்தினர்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. மாலை முதல், சென்னையின் முக்கிய பகுதிகளான கிண்டி, மாம்பலம், பல்லாவரம், ஆலந்தூர், தாம்பரம் மற்றும் புறநகர் பகுதிகளான குன்றத்தூர், பூவிருந்தவல்லி, அம்பத்தூர், மாதவரம், வண்டலூர் பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களைச் சந்தித்தனர்.

Subways closed in chennai due to water logging

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் அடுத்த 3 மண நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலான 2 மணி நேரத்தில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 19 செ.மீ மழை பொழிந்துள்ளது. மேலும், அம்பத்தூரில் 12.6 செ.மீ, திருவிக நகர் 12 செ.மீ, கொளத்தூரில் 6.2 செ.மீ, அம்பத்தூரில் 5.4 செ.மீ, கத்திவாக்கம் 4.6 செ.மீ மழை பொழிந்துள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கின்றன. மேலும், வாகனங்கள் சாரை சாரையாக ஊர்ந்து செல்கின்றன. தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையில் மொத்தமாக உள்ள 20 சுரங்கப்பாதைகளில் 5 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி இருக்கிறது. பெரம்பூர், கெங்குரெட்டி, நுங்கம்பாக்கம், துரைசாமி, சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் மூடப்பட்டன.

சென்னையில் பலத்த மழை பெய்து வருவதால் மக்கள் தேவையின்றி வெளியேற வேண்டாம் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. கடந்த ஒரு மணி நேரத்தில் பெய்த கனமழையால் மழைநீர் தேங்கியதையடுத்து பெரம்பூர் ஹை ரோடு சுரங்கப்பாதை, சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதை, தாம்பரம் சுரங்கப்பாதை ஆகியவை மூடப்பட்டன.

சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற போர்க்கால அடிப்படையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுவரை, அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டிருப்பதால், அப்பகுதிகளுக்கு செல்வோர் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு நாளை காலை 8.30 மணி வரை மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+