பொளக்கும் வெயில் + அதிக ஈரப்பதம்! தமிழகத்தில் அடுத்த ஒரு வாரம் இப்படிதான் இருக்கும்!
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது. இருப்பினும். அடுத்த ஒரு வாரத்திற்கு அசௌகரியமான வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதேநேரம் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குழப்பியடிக்கும் இந்த வானிலையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இது தொடர்பாக விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "தென்தமிழக கடலோரப்பகுதிகளில் ஒருசில இடங்களிலும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
- திருச்சுழி (விருதுநகர்) 4,
- வால்பாறை PTO (கோயம்புத்தூர்), உபாசி TRF AWS (கோயம்புத்தூர்) தலா 3,
- கடம்பூர் (தூத்துக்குடி), போடிநாயக்கனூர் (தேனி), பாம்பன் (ராமநாதபுரம்) தலா 2,
- ஆடுதுறை AWS (தஞ்சாவூர்), எட்டயபுரம் (தூத்துக்குடி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), கன்னிமார் (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), ஒட்டப்பிடாரம் (தூத்துக்குடி), பரமக்குடி (ராமநாதபுரம்), காரையூர் (புதுக்கோட்டை), மஞ்சளாறு (தஞ்சாவூர்), பொன்னமராவதி (புதுக்கோட்டை) தலா 1.
வெப்பநிலை நிலவரம்:
அதிகபட்ச வெப்பநிலையாக கரூர் பரமத்தியில் 39.5° செல்சியஸ் வெயில் பதிவாகியிருக்கிறது. குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்) கரூர் பரமத்தியில் 23.5° செல்சியஸ் பதிவாகியிருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை.
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருந்தது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.
வட தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 35-39° செல்சியஸ், தென் தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 36-37° செல்சியஸ், கடலோரப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 33-36" செல்சியஸ், மலைப்பகுதிகளில் 21-28° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
30-04-2025 மற்றும் 01-05-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
02-05-2025 மற்றும் 03-05-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
04-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
05-05-2025 மற்றும் 06-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்த வரை, 30-04-2025 முதல் 02-05-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
03-05-2025 மற்றும் 04-05-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
30-04-2025 முதல் 02-05-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3" செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 04-05-2025 மற்றும் 05-05-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
30-04-2025 முதல் 02-05-2025: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் வெப்பம் சார்ந்த அசெளகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (30-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (01-05-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகளை பொறுத்த வரை, 30-04-2025 மற்றும் 01-05-2025: எச்சரிக்கை ஏதுமில்லை. 02-05-2025 முதல் 04-05-2025 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
30-04-2025 மற்றும் 01-05-2025: எச்சரிக்கை ஏதுமில்லை. 02-05-2025: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 04-05-2025 மற்றும் 05-05-2025: எச்சரிக்கை ஏதுமில்லை.
அரபிக்கடல் பகுதிகளில் 30-04-2025 மற்றும் 04-05-2025: எச்சரிக்கை ஏதுமில்லை. எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
-
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
சொத்து பதிவு பிரச்சனைக்கு தீர்வு.. STAR 3.0 மூலம் தமிழக பதிவுத்துறை கொண்டுவந்த புதிய வசதி -
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
நான் அடிச்ச 10 பேருமே டானுங்க தான்.. தமிழக அரசியலை புரட்டிப் போட்ட விஜய்! சத்தமில்லாமல் தவெக சாதனை! -
23 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி! தேர்தல் நிதியில் முறைகேடு? ஐவர் குழு அமைப்பு! வேட்பாளர்கள் ஷாக் -
இலவசம் அரசு பஸ்களில்.. இப்போ எங்கே தெரியுமா? நம்ம தமிழகத்தின் விடியல் பயணம்தான் இதில் பெஸ்ட் -
லேட் ஆகுது மதுரவாயல் பாலம்.. முடங்கும் கார் ஏற்றுமதி! சென்னை போர்ட்டில் நடப்பது என்ன? எக்ஸ்க்ளூசிவ் -
தாய்மாமன் என வசனம் பேசிய விஜய்.. குழந்தைகள் பாலியல் மிருகங்களிடம் சீரழிவதை வேடிக்கை பார்க்கிறாரா? -
தங்க நகை கடன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் டாப் 5 தென் மாநிலங்கள்! தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications