வெயில் குறையும்.. மே 7 வரை மழை இருக்கும்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்!
சென்னை: தமிழ்நாட்டில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது. இது மே 7ம் தேதி வரை நீடிக்கும் என்றும், ஒரு சில இடங்களில் வெயில் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், தென் மாநிலமான தமிழ்நாட்டில் வெயில் குறையும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பது மக்கள் மனதை குளிர செய்திருக்கிறது.

இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் வானிலை அறிவிப்பில், "கடந்த 24 மணி நேரத்தில் தென்தமிழகம் மற்றும் வடதமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
கிளன்மார்கன் (நீலகிரி) 3,
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), மேல் கூடலூர் (நீலகிரி), பார்வூட் (நீலகிரி), கூடலூர் பஜார் (நீலகிரி), கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி) தலா 2,
தளி (கிருஷ்ணகிரி), நாங்குனேரி (திருநெல்வேலி), ஒசூர் AWS (கிருஷ்ணகிரி), சாத்தான்குளம் (தூத்துக்குடி), நடுவட்டம் (நீலகிரி), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), ஓசூர் (கிருஷ்ணகிரி) தலா 1.
வெப்பநிலை நிலவரம்:
அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்த வரை வேலூரில் 40.5° செல்சியஸ் பதிவாகியிருக்கிறது. குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்) கரூர் பரமத்தியில் 23.5° செல்சியஸ் வெயில் பதிவாகியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 1-2 செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை.
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3* செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருந்தது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.
வட தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 37-41* செல்சியஸ், தென் தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 36-38 செல்சியஸ், தென் தமிழக கடலோரப்பகுதிகளில் 33-35° செல்சியஸ், வட தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35-36° செல்சியஸ், மலைப்பகுதிகளில் 21-28° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. எனவே இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை தொடங்கி மே மாதம் 3ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மே மாதம் 4-5ம் தேதி தமிழகத்தில் ஒருசில காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பெய்யக்கூடும். மற்ற இடங்களிலும், புதுவை மற்றும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மே 6 மற்றும் 7ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்து இன்று முதல் மே 4 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஓரிரு இடங்களில் சற்று உயரக்கூடும். மே 5ம் தேதி முதல் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் சற்று குறையக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
01-05-2025 முதல் 03-05-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3" செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 04-05-2025 மற்றும் 05-05-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3* செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
01-05-2025 மற்றும் 02-05-2025: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் வெப்பம் சார்ந்த அசெளகரியம் ஏற்படலாம்.












Click it and Unblock the Notifications