Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடேங்கப்பா அரியலூர்.. வெயிலில் வேலூரை ஓவர் டேக் செய்தது! இன்றைய வெப்பநிலை நிலவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்திருப்பதால் மொத்த வெப்பநிலை ஓரளவுக்கு குறைந்திருக்கிறது. இருப்பினும் இன்று வெயிலில் வேலூரை அரியலூர் மாவட்டம் ஓவர் டேக் செய்திருக்கிறது. இதனை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார்.

அரியலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 39.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருக்கிறது. இரண்டாவது இடத்தில் சேலம் இருக்கிறது.

Tamil Nadu Ariyalur Vellore
  • அரியலூர் 39.2°C - 102.56°F
  • சேலம் 39.1°C - 102.38°F
  • கரூர் 38.5°C - 101.3°F
  • ஈரோடு 38.4°C - 101.12°F
  • வேலூர் 38.1°C - 100.58°F
  • திருத்தணி 38.0°C - 100.4°F
  • திருப்பத்தூர் 38.0°C - 100.4°F
  • தஞ்சாவூர் 38.0°C - 100.4°F

என வெயில் பதிவாகியிருக்கிறது. இதில் மகிழ்ச்சியான விஷயம் என்னவெனில் ஒரு மாவட்டத்தில் கூட வெயில் 40 டிகிரியை தாண்டவில்லை. குறிப்பாக மதுரை மற்றும் திருச்சியில் கடந்த சில நாட்களாக வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெயில் பதிவாயிருந்தது. ஆனால், இன்று வெயில் 100 டிகிரியை தொடவில்லை. சென்னையை பொறுத்தவரை இன்று 98.6 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவாகியிருக்கிறது. அடுத்தடுத்த நாட்களிலும் வெயில் இதே அளவில்தான் இருக்கும் என்றும் 100 டிகிரியை தாண்டாது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மழையை பொறுத்தவரை கன்னியாகுமரி மற்றும் தென்காசியில் நல்ல மழை பதிவாகியிருக்கிறது. அதே நேரம் தஞ்சை மற்றும் திருவாரூரில் ஒரு சில இடங்களில் மழை பெய்திருக்கிறது.

முன்னதாக இன்று சென்னை வானிலை ஆய்வு மையத்தால் வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "கடந்த24 மணி நேரத்தில் சில இடங்களில் மழை பெய்திருக்கிறது. இது தொடர்பான விவரம் சென்டிமீட்டரில்.

  • சாத்தான்குளம் (தூத்துக்குடி), திற்பரப்பு (கன்னியாகுமரி), உத்தமபாளையம் (தேனி) தலா 3,
  • பேச்சிப்பாறை AWS (கன்னியாகுமரி), மணியாச்சி (தூத்துக்குடி) தலா 2,
  • திருச்சுழி (விருதுநகர்). ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), கோவில்பட்டி AWS (தூத்துக்குடி), சிவலோகம்(சிற்றாறு-II) (கன்னியாகுமரி), அடையாமடை (கன்னியாகுமரி), சிற்றாறு-1 (கன்னியாகுமரி), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), கயத்தார் (தூத்துக்குடி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), சிவகாசி (விருதுநகர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), மேட்டுப்பட்டி (மதுரை), களியல் (கன்னியாகுமரி), உபாசி TRE AWS (கோயம்புத்தூர்), பெரியபட்டி (மதுரை) தலா 1.

வெப்பநிலை நிலவரம்:

அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்த அளவில் கரூர் பரமத்தி மற்றும் மதுரை விமான நிலையத்தில் 40.2° செல்சியஸ் வெயில் பதிவாகியிருக்கிறது. குறைந்தபட்ச வெப்பநிலையை (சமவெளிப்பகுதிகளில்) பொறுத்த அளவில், கரூர் பரமத்தியில் 22.0° செல்சியஸ் வெயில் பதிவாகியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை.

அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2-3" செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருந்தது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 36-41* செல்சியஸ், வட தமிழக கடலோரப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35-37° செல்சியஸ், தென் தமிழக கடலோரப்பகுதிகளில் 33-35* செல்சியஸ், மலைப்பகுதிகளில் 19-29° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழுதினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. எனவே இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

27-04-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

28-04-2025 முதல் 02-05-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்த அளவில், இன்று முதல் 30-04-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஒருசில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை உயரக்கூடும்.

இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:

26-04-2025 மற்றும் 27-04-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3" செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 28-04-2025 முதல் 30-04-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

26-04-2025 மற்றும் 27-04-2025: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-4° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (26-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (27-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகளை பொறுத்த அளவில், 26-04-2025: குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 27-04-2025 முதல் 30-04-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை

அரபிக்கடல் பகுதிகள்:

26-04-2025: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் தெற்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள பகுதிகள், லட்சதீவு மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 27-04-2025 முதல் 30-04-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.

வங்கக்கடல் பகுதிகளிலும் 26-04-2025 முதல் 30-04-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை. எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Take a Poll

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+