சூப்பர் எல் நினோ.. அடுத்த 3 வாரங்களுக்கு வெயில் கொளுத்தும்.. அலர்ட் விடுத்த டெல்டா வெதர்மேன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர் எல் நினோ தாக்கத்தின் எதிரொலியாக, தமிழ்நாட்டில் அடுத்த 3 வாரங்களுக்கு இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என்று டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

டெல்டா வெதர்மேன் என அழைக்கப்படும் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள பதிவில், "மிக தெளிவான மேகங்கள் இல்லாத செயற்கைகோள் படம். சூப்பர் எல் நினோ முதல்கட்ட தாக்கமான நீண்ட கோடை, அதித வெப்பம், இயல்பிற்கு அதிகமான வெப்பநிலை அடுத்த 3 வாரங்களுக்கு தமிழ்நாட்டில் தீவிரமாக இருக்கும்.

Super El Ni o Tamil Nadu Temperatures Likely to Remain Above Normal for 3 Weeks

சூப்பர் எல்-நினோ எஃபெக்ட்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பகல் நேர வெப்பநிலை இயல்பிலிருந்து 3 - 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். இடையிடையே இரவில் ஆங்காங்கே வெப்பச் சலன மழை பதிவானாலும் பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும்.

பொதுமக்கள் கவனத்திற்கு...

அதிகமான நீர்சத்துடைய ஆகாரங்கள், பழங்களையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

வயது முதிர்ந்தவர்கள், உடல் நிலை சரியில்லாதவர்கள் நண்பகலில் வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது.

விவசாயிகள் கவனத்திற்கு...

வேளாண் பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள் முற்பகல், மாலை நேரத்தில் வேளாண் பணிகளை திட்டமிடுங்கள்..நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரையிலான காலக்கட்டத்தில் நேரடி வெயில் தாக்கத்தை தவிர்ப்பது நல்லது.

நேரடி நெல் விதைத்துள்ள விவசாயிகள், முளைத்த இளம் பயிர்களுக்கு விவசாயிகள் தேவைக்கு ஏற்ப நீரை வையுங்கள்.

விதைத்தவர்கள் தண்ணீர் வைக்க வாய்ப்பு இருந்தால் இரைத்தாவது தண்ணீர் வையுங்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

சூப்பர் எல் நினோ ஆபத்து

சூப்பர் எல் நினோ தாக்கத்தால் உலகளவில் கடுமையான வறட்சி, வெப்பநிலை உயர்வு மற்றும் அசாதாரண பருவமழை போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.'சூப்பர் எல் நினோ'வால் அடுத்த 6 மாதங்களில் உலகம் முழுவதும் 4.5 லட்சத்துக்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என சிகாகோ பல்கலைக்கழகத்தில் இயங்கும் கிளைமேட் இம்பாக்ட் லேப் வெளியிட்டிள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மட்டும் அடுத்த பிப்ரவரி மாதத்துக்குள் 15,800 பேர் வெப்பம் சார்ந்த பிரச்சனைகளால் உயிரிழக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+