கோடை மழை ஏப்.25 வரை இருக்கு.. ஆனா சென்னை மக்களே உஷார்! வானிலை மையம் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் 25ம் தேதி வரை மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது குறித்து ஆய்வு மையம் தரப்பில் விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

Tamil Nadu rain Chennai

"கடந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை நிலவரத்தை பொறுத்த அளவில், அதிகபட்ச வெப்பநிலையாக மதுரை விமான நிலையத்தில் 39.4° செல்சியஸ் பதிவாகியிருக்கிறது. குறைந்தபட்ச வெப்பநிலையாக (சமவெளிப்பகுதிகளில்) கரூர் பரமத்தியில் 22.5° செல்சியஸ் பதிவாகியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை.

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருந்தது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 36-39° செல்சியஸ், தமிழக கடலோரப் பகுதிகள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34-36° செல்சியஸ், மலைப் பகுதிகளில் 21-28° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

அடுத்த 7 தினங்களுக்கான எச்சரிக்கை

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. எனவே இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

21-04-2025 முதல் 25-04-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்த அளவில், இன்று முதல் 21-04-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3° செல்சியஸ் வரை உயரக்கூடும். 22-04-2025 மற்றும் 23-04-2025: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.

இயல்பு நிலையிலிருந்து வெப்ப அளவின் வேறுபாடு:

இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 20-04-2025 முதல் 23-04-2025 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 19-04-2025 முதல் 21-04-2025 வரை: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை

இன்று (19-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (20-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தமிழக கடலோரப்பகுதிகளில் இன்று முதல் 21-04-2025 வரை எச்சரிக்கை ஏதுமில்லை. 22-04-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 23-04-2025: எச்சரிக்கை ஏதுமில்லை.

எனவு மேற்குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அதேபோல வங்கக்கடல் பகுதிகள் & அரபிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 23-04-2025 வரை எச்சரிக்கை ஏதுமில்லை.

கடந்த 24 மணி நேர மழை நிலவரம்

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்)

அணைகெடங்கு (கன்னியாகுமரி) 8,
மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி) 7,
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 6,
பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்) 4,
வால்பாறை PTO (கோயம்புத்தூர்), பயணியர் விடுதி சிவகங்கை (சிவகங்கை), உபாசி TRF AWS (நீலகிரி), பி.என்.பாளையம் ARG (கோயம்புத்தூர்), சோத்துப்பாறை (தேனி), உதகமண்டலம் (நீலகிரி), பென்னாகரம் (தர்மபுரி), கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி), பெரியகுளம் (தேனி) தலா 3,
ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்), சுருளக்கோடு (கன்னியாகுமரி), கரியகோவில் அணை (சேலம்), கிளன்மார்கன் (நீலகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), பெரியகுளம் PTO (தேனி), சின்கோனா (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), மாரண்டஹள்ளி (தர்மபுரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), அடையாமடை (கன்னியாகுமரி) தலா 2,
ஏத்தாப்பூர் (சேலம்), மயிலாடுதுறை AWS (மயிலாடுதுறை), மஞ்சளாறு (தேனி), திற்பரப்பு (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை AWS (கன்னியாகுமரி), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), திருமூர்த்தி IB (திருப்பூர்), பழனி (திண்டுக்கல்), திருமூர்த்தி அணை (திருப்பூர்) தலா 1 என மழை பதவாகியிருக்கிறது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+