வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. அடுத்த வாரத்தில் கொட்டப்போகும் கனமழை! வானிலை மையம் வார்னிங்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை தீவிரமடைந்து வந்தது. தற்போது மழையின் தீவிரம் குறைந்து வெயில் வாட்ட தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் அடுத்த வாரம் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், இதனால் மழை தீவிரமெடுக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது
அதாவது, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் தென்மேற்கு பருவமழை ஜூன் 1 முதல் 12ம் தேதி வரை தீவிரம் குறைந்து காணப்படும். ஆனால் அடுத்த வாரம் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால், ஜூன் 12ம் தேதி வாக்கில் மீண்டும் பருவமழையை படிப்படியாக தீவிரமடையும்.

இந்த மாதம் வெயில் எப்படி இருக்கும்?
வறண்ட காற்றின் ஊடுருவல் காரணமாக, ஜூன் முதல் வாரத்தில், தமிழகத்தில் பகல்நேர வெப்பநிலை இயல்பைவிட அதிகரித்து காணப்படும். அதேபோல பருவமழையும் சற்று குறையும். மொத்தமாக ஜூன் மாதத்தில் தமிழகத்தில் வெப்பநிலை, மாலை/இரவு பெய்யக்கூடிய வெப்பச்சலன மழை என இரண்டுமே இயல்பிற்கு அதிகம் பதிவாகும். அதாவது சில நாட்கள் வெப்பம் மிகுந்த நாட்களாகவும், அதனை தொடர்ந்து வரும் நாட்கள் இடிமழை நாட்களாகவும் இருக்கும்.
மழையின் தீவிரம்
ஜூன் 15ம் தேதி வாக்கில் தென்மேற்கு பருவமழையின் இரண்டாம் சுற்று தொடங்கும். இதனால் கேரளா, கர்நாடகா, தமிழக மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மழை தீவிரமடைய வாய்ப்பு இருக்கிறது. சுருக்கமாக சொல்வதெனில், ஜூன் மாதம் வெயிலும் கொளுத்தும். அதே நேரம் மழையும் கொட்டும் என்று டெல்டா வெதர்மேன் உள்ளிட்ட தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறியிருந்தனர்.
இந்த கணிப்பை உறுதி செய்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், அடுத்த வாரம் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகும் என்று கூறியிருக்கிறது.
அடுத்த ஒரு வாரத்திற்கான வானிலை
முன்னதாக வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், "மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூன்.7 முதல் 9 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன்.10ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன்.11ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலை குறித்த அறிவிப்பு
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்தவரை, இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஒருசில இடங்களில் சற்று உயரக்கூடும். இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டை பொறுத்த அளவில் இன்றும் நாளையும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3" செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications