இப்போ லட்சத்தீவு பகுதியில் சுத்து போடுதே.. அடுத்த 7 நாட்களுக்கு மழை.. வானிலை மையம் எச்சரிக்கை!
சென்னை: லட்சத்தீவு பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் மாத தொடக்கத்தில் மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்தது. மிக்ஜாம் புயல் சென்னையில் கரையைக் கடக்கவில்லை என்ற போதிலும், அந்த புயல் நீண்ட நேரம் சென்னைக்கு அருகே நிலைகொண்டது. இதனால் சென்னையில் பாதிப்புகள் மிக மோசமாக இருந்தது. கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து, கடந்த 17,18ஆம் தேதிகளில் தென்தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. வளிமண்டல கீழடுக்கு சுழறி காரணமாக தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. வெள்ள நீர் வடிந்து வரும் நிலையில், மீட்பு மற்றும் நிவாரண பணிகளைத் தமிழ்நாடு அரசு முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. மத்திய குழுவினர் இன்று ஆய்வு செய்கின்றனர். முதல்வர் ஸ்டாலின் நாளை இந்த 4 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் மீண்டும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல சுழற்சியானது இன்று லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும், நாளையும் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22.12.2023 முதல் 25.12.2023 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications