இன்று வெடித்து கொட்ட போகுது கனமழை.. சுத்து போட்டு அடிக்கும் மழை மேகங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: கொளுத்தும் கோடை வெயிலுக்கு நடுவே நேற்றைய தினம் தமிழகத்தில் பரவலாக ஓரிரு இடங்களில் மழை பெய்தது. இது பொதுமக்களுக்கு மிகப் பெரிய நிம்மதியைக் கொடுப்பதாகவே இருந்தது. இதற்கிடையே இன்றும் மாநிலத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. குறிப்பாக விருதுநகர், தேனி மற்றும் திண்டுக்கல்லில் கனமழை பெய்யும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் கோடைக் காலம் ஆரம்பித்துவிட்ட சூழலில், ஏப்ரல் 1ம் தேதி முதலே மாநிலத்தில் பரவலாக வெப்பம் அதிகரித்திருந்தது. இதன் காரணமாகப் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட நிலையில், கடந்த சில நாட்களாக கிளைமேட் மொத்தமாக மாறியது. குறிப்பாக நேற்றைய தினம் மாநிலத்தில் பரவலாக மழை பெய்தது. கோடை வெயிலுக்கு நடுவே பெய்த இந்த மழை வெப்பத்தைக் குறைப்பதாகவே இருந்தது.

கனமழை
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இன்றைய தினம் தென்தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். விருதுநகர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை ஏப்ரல் 7ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்ரல் 8ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் நாட்கள்
ஏப்ரல் 9ம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள், மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏப்ரல் 10ம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள், மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏப்ரல் 11ம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பகுதிகளில் வானிலை நிலவக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு
24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதலைப் பொறுத்தவரை நாளை வரை வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். தென்தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. ஏப்ரல் 8, 9 தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டைப் பொறுத்தவரை ஏப்ரல் 7ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் தென்தமிழகத்தில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னை கிளைமேட்
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று வானிலை மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications