அடுத்த 3 நாட்கள்.. வெயிலே இருக்காது.. வெளுத்து வாங்க போகும் மழை.. வானிலை மையம் தந்த குட் நியூஸ்
சென்னை: இன்று முதல் 15ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். சென்னையில் அதிகாலையில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யும்.

டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டு உள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை: அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தின் அநேக மாவட்டங்களில் பொதுவாக இயல்பை ஒட்டியும் இருந்தது. கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருந்தது.
அதிக பட்ச வெப்பநிலை ஈரோடு மற்றும் வேலூரில் 40.0" செல்சியஸ் பதிவாகியுள்ளது.
இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 3639° செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34-37 செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 22-29° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 37.2 செல்சியஸ் (1.2° செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 36.4° செல்சியஸ் (1.0 செல்சியஸ்) பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு:
தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்)
பென்னாகரம் (தர்மபுரி) 10, ஒகேனக்கல் (தர்மபுரி) 8, சமயபுரம் (திருச்சிராப்பள்ளி) 7, உசிலம்பட்டி (மதுரை) முசிறி (திருச்சிராப்பள்ளி) தலா 5, அம்மாபேட்டை (ஈரோடு). பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), மேட்டுப்பட்டி (மதுரை), கல்வந்திரி (மதுரை), தேவிமங்கலம் (திருச்சிராப்பள்ளி), புத்தன் அணை (கன்னியாகுமரி), மேல் கூடலூர் (நீலகிரி), அருப்புக்கோட்டை (விருதுநகர்) தலா 5, ஆலங்குடி (புதுக்கோட்டை) பெருங்களூர் (புதுக்கோட்டை) புலிப்பட்டி (மதுரை) தல 4, திருமயம் (புதுக்கோட்டை). கோவில்பட்டி (தூத்துக்குடி), திருவாடானை (ராமநாதபுரம்), சுயத்தார் (தூத்துக்குடி), குப்பணம்பட்டி (மதுரை), பெரியபட்டி (மதுரை), ஆனைமடுவு அணை (சேலம்), சிவலோகம் சித்தார் (கன்னியாகுமரி). சுருளக்கோடு (கன்னியாகுமரி), கடம்பூர் (தூத்துக்குடி) தவா 3, கோவிலங்குளம் (விருதுநகர்), அருப்புக்கோட்டை KVK AWS (விருதுநகர்). திருமங்கலம் (மதுரை), வம்பன் KVK AWS (புதுக்கோட்டை), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), கல்லிக்குடி (மதுரை), கூடலூர் பஜார் (நீலகிரி), மலையூர் (புதுக்கோட்டை), துறையூர் (திருச்சிராப்பள்ளி), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), சிட்டம்பட்டி (மதுரை). களியல் (கன்னியாகுமரி), அரிமளம் (புதுக்கோட்டை), திருமானூர் (அரியலூர்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), செருமுள்ளி (நீலகிரி), ஹாரிசன்ஸ் மலையாளம் லிமிடெட்(நீலகிரி), மணமேல்குடி (புதுக்கோட்டை), குளித்தலை (கரூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்). ஒசூர் AW5 (கிருஷ்ணகிரி), நன்னிலம் (திருவாரூர்), திண்டுக்கல் (திண்டுக்கல்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), சிறுகமணி KVK AWS (திருச்சிராப்பள்ளி) தலா 2,
மதுரை நகரம் (மதுரை), மதுரை வடக்கு (மதுரை), புலிவலம் (திருச்சிராப்பள்ளி), சிற்றாறு- (கன்னியாகுமரி), தல்லி (கிருஷ்ணகிரி), தல்லாகுளம் (மதுரை), மேலூர் (மதுரை), பொன்னையார் அணை (திருச்சிராப்பள்ளி), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), வத்தலை அணைக்கட்டு (திருச்சிராப்பள்ளி), நடுவட்டம் (நீலகிரி), வீரபாண்டி (தேனி), ஒசூர் (கிருஷ்ணகிரி), மணப்பாறை (திருச்சிராப்பள்ளி), கிருஷ்ணராயபுரம் (கரூர்), கோத்தகிரி (நீலகிரி), தக்கலை (கன்னியாகுமரி), பஞ்சப்பட்டி (கரூர்), எலந்தகுட்டை மேடு (ஈரோடு), கேத்தி (நீலகிரி), கலவை பொதுப்பணித்துறை (ராணிப்பேட்டை), 800 சூளகிரி (கிருஷ்ணகிரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), கவுந்தப்பாடி (ஈரோடு), எச்சன்விடுதி (தஞ்சாவூர்), சின்னார் அணை (கிருஷ்ணகிரி) தலா 1 மிமீ பதிவாகி உள்ளது.,












Click it and Unblock the Notifications