14 ஆம் தேதி வரை லேசான மழைக்கே வாய்ப்பு.. சென்னையில் நாளை கிளைமேட் எப்படி இருக்கும்? வானிலை மையம்
சென்னை: கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வரும் 14 ஆம் தேதி வரை தமிழகத்தில் லேசான மழைக்கே வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் சென்னையில் நாளை ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என கணித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. திடீரென வெயில் அடிப்பது பிறகு மேகக் கூட்டங்கள் கூடி மிதமான மழையும் பெய்து வருகிறது. நேற்று மட்டும் நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், சாத்தூர், புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடியில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது.

லேசான மழைக்கே வாய்ப்பு
பெரும்பாலான இடங்களில் வெயில் அடித்து வருகிறது. இந்த நிலையில் வரும் 14 ஆம் தேதி வரை மிதமான மழைக்கே வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் 14-12-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் நாளை மழைக்கு வாய்ப்பு
சென்னையில் இன்று (08-12-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை (09-12-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மழை அளவு செமீ:
* ஊத்து (திருநெல்வேலி) 8.
* நாலுமுக்கு (திருநெல்வேலி), காக்காச்சி (திருநெல்வேலி), மாஞ்சோலை (திருநெல்வேலி} தலா 7.
* கமுதி (ராமநாதபுரம்) 4,
* பாபநாசம் (திருநெல்வேலி), சேர்வலாறு அணை (திருநெல்வேலி), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்) தலா 3 செமீ,
* இளையாங்குடி (சிவகங்கை), கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), சாத்தூர் (விருதுநகர்), தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்) தலா 2,
* திருவாடானை (ராமநாதபுரம்), மணிமுத்தாறு அணை ARG (திருநெல்வேலி), கோவில்பட்டி (தூத்துக்குடி), மணிமுத்தாறு (திருநெல்வேலி), கடனா அணை (தென்காசி), பரமக்குடி (ராமநாதபுரம்), நீடாமங்கலம் (திருவாரூர்), கமுதி ARG (ராமநாதபுரம்), நன்னிலம் (திருவாரூர்), கடலாடி (ராமநாதபுரம்), முதுகுளத்தூர் (ராமநாதபுரம்), எட்டயபுரம் (தூத்துக்குடி), தொண்டி (ராமநாதபுரம்), கழுகுமலை (புதுக்கோட்டை) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்: 08-12-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
09-12-2025 மற்றும் 10-12-2025: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
11-12-2025 மற்றும் 12-12-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
08-12-2025: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
09-12-2025 மற்றும் 10-12-2025: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 11-12-2025: குமரிக்கடல் பகுதிகளை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கோவை, நீலகிரிக்கு பறந்த அலர்ட்.. கொட்டப்போகும் மழை! வானிலை மையம் கொடுத்த அப்டேட்! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?












Click it and Unblock the Notifications