அடுத்த 6 நாட்கள்! போச்சு போச்சு.. வருகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டிற்கு வார்னிங்
சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும், காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும் இன்றில் இருந்து 6 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 23.07.2023 மற்றும் 24.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
25.07.2023 மற்றும் 26.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
27.07.2023 டிகல் 29.07.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சுரிய இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னதுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிரிெ
செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்);
அவலாஞ்சி (நீலகிரி) 14, கூடலூர் பஜார் (நீலகிரி) 8, மேல் கூடலூர் (நீலகிரி), சின்னகல்லாறு (கோயம்புத்தூர்) தலா 7, வொர்த் எஸ்டேட் (நீலகிரி), நவெட்டம் (நீலகிரி), தாலுகா அலுவலகம் பந்ததூர் (நீலகிரி), வால்பாறை FTO (கோயம்புத்தூர்) தலா 5, பார்வூட் (நீலகிரி), மேல் பவானி (நீலகிரி), ஹரிசன் லிமிடெட் செருமல்லி (நீலகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), சோலையாறு (கோயம்புத்தூர்) தலா 5. சின்கோனா (கோயம்புத்தூர்). வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), தேவாலா (நீலகிரி) தலா 4. சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), பொதுப்பணித்துறை மாக்கினாம்பட்டி (கோயம்புத்தூர்).
கிளென்மார்கன் (நீலகிரி), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்). புழல் ARG (திருவள்ளூர்) தலா 3. கொரட்டூர் (திருவள்ளூர்). பண்டி (திருவள்ளூர்), திருத்தணி PTO (திருவள்ளூர்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்) தலா 2, பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), திருத்தணி (திருவள்ளூர்), அரக்கோணம் (இராணிப்பேட்டை), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), சோளிங்கர் (இராணிப்பேட்டை).
சோமவரம் (திருவள்ளூர்). மாதவரம் AWS (திருவள்ளூர்). எமரால்டு (நீலகிரி மாவட்டம்), திருவள்ளூர்,திருவாலங்காடு (திருவள்ளூர்). பொன்னேரி (திருவள்ளூர்), ஆனைமலை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), டிஜிபி அலுவலகம் (சென்னை). சிடி மருத்துவமனை தொண்டையார்பேட்டை (சென்னை). பெரம்பூர் (சென்னை), சென்னை நுங்கம்பாக்கம், அம்பத்தூர் (திருவள்ளூர்). திகர் IVK AWS (திருவள்ளூர்), ஆவடி (திருவள்ளூர்), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை), ஐந்தா பாலம் (நீலகிரி), பெரியார் (தேனி). ஆழியாறு (கோயம்புத்தூர்). ஏசிஎஸ் மளத்துவக் கல்லூரி (காஞ்சிபுரம்) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை; வங்கக்கடல் பகுதிகள்:
23.07.2023: தமிழக கடலோரப்பகுதிகள். மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
24.07.2023: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைளுடா மற்றும் அதனை ஓட்டிய குமரிக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள். இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு - தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
25.07.2023: மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
ஆந்திர கடலோரப்பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள். மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
26.07.2023 &. 27.07.2023: மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆந்திர கடலோரப்பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள். மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள். இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை சுட்டிய தென் மேற்கு -தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்: 23.07.2023 முதல் 27.07.2023 வரை. மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இலட்சத்தீவு பகுதிகள், கேரள-கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications