பனிமூட்டம் குறைந்து.. வெயில் அதிகரிக்கும்! தமிழக வானிலை நிலவரம் அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பருவமழை முடிந்து தற்போது பனிமூட்டம் நிலவி வரும் நிலையில், இனி வெயில் படிப்படியாக அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதாவது, "இன்று, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

weather tamil nadu

நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

9 முதல் 13 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (07-02-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (08-02-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அதேபோல மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை" என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்த அளவில் கரூர் பரமத்தியில் 34.8 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது. அதேபோல திருப்பத்தூர் மாவட்டத்தில் 2.1-4 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரித்துள்ளது.

திண்டுக்கல், நாகபட்டினம் மற்றும் நீலகிரி மாவட்டங்களில், -2.1° செல்சியஸ் முதல் 4.0° செல்சியஸ் வரை வெயில் குறைந்திருக்கிறது. மற்ற மாவட்டங்களில் வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+