சென்னை உட்பட 24 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! குடையை ரெடியாக வச்சுக்கோங்க! வானிலை எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த ஆண்டு மே மாதம் தமிழகத்தில் வெயில் எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்தது. ஆனால் ஜூன் முதல் வாரம் வெயில் வாட்டி எடுக்க தொடங்கியது. இந்நிலையில் தற்போது மீண்டும் வானிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இன்று காலை 10 மணி வரை சென்னை உட்பட 24 மாவட்டங்களில் மழை பெய்யும் என மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

நேற்றும் சென்னையில் காலை முதல் கடுமையான வெயில் பதிவாகியிருந்த நிலையில், மதிய நேரத்தில் திடீரென மழை கொட்டி தீர்த்தது. இன்றும் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் மக்கள் சற்று ஆசுவாசமடைந்துள்ளனர். மழை குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பின்படி

rain chennai tamil nadu

நீலகிரி
கோயம்புத்தூர்
தேனி
திருப்பூர்
திண்டுக்கல்
தென்காசி
திருநெல்வேலி
கன்னியாகுமரி
கடலூர்
மயிலாடுதுறை
நாகப்பட்டினம்
திருவாரூர்

என 12 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதேபோல

சென்னை
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
ராணிப்பேட்டை
வேலூர்
திருப்பத்தூர்
கிருஷ்ணகிரி
சேலம்
திருவண்ணாமலை
விழுப்புரம்
கள்ளக்குறிச்சி

என 12 மாவட்டங்களிலும் புதுச்சேரி பகுதிகளிலும் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேபோல அடுத்த 5 நாட்களை பொறுத்த அளவில்,

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூன்.11ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

ஜூன்.12ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

ஜூன்.13 மற்றும் 14ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+