மூன்று சுழற்சிகள்.. சேர்ந்து போடும் கெட்ட ஆட்டம்.. மாட்டிக்கொண்ட சென்னை.. வானிலையில் ட்விஸ்ட்
சென்னை; வங்கக்கடலில் உருவாகி வரும் மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாடு வானிலை எப்படி மாறும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் ஒன்இந்தியாவிற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது. சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 680 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, டிச.3ம் தேதி மிக்ஜாம் புயலாக வலுப்பெறக்கூடும். பின் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்னைக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே 4-5ம் தேதி புயலாக கரையை கடக்க கூடும்.
இதனால் டிசம்பர் 3ம் தேதி சென்னை முதல் கடலூர் வரையிலான கடலோர மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து தென் கிழக்கில் 680 கி.மீ. தொலைவில் உள்ளது! மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது.
சிறப்பு பேட்டி; இந்த நிலையில் மிக்ஜாம் புயல் தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் ஒன்இந்தியாவிற்கு அளித்துள்ள பேட்டியில், சென்னை போன்ற நகர்ப்புற இடங்களில் மழை எதிர்பார்த்ததுதான். ஒரு சில வானிலை மாடல்கள் இதை காட்டிக்கொண்டுதான் இருந்தது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.. இந்த மழை மேகங்கள் கடலில் இருந்து கிழக்கு டூ மேற்கு திசையில் நகரும் போது மழை பெய்யும். மழை மேகங்கள் இப்படி நகரும் போது சூடு காரணமாக வலிமை அடையும்.
இந்த வலிமை காரணமாகவே சென்னையில் நகர்ப்புற பகுதிகளில் மழை பெய்கிறது. சென்னையின் நகர்ப்புற பகுதிகளில் கனமழை பெய்ய இது முக்கிய காரணம். வடக்கு, மேற்கு புறநகர் பகுதிகளில் கனமழை பெய்ய இதுவே முக்கியமான காரணம்.
வானிலை மையம் கணித்ததை விட அதிக மழை பெய்துள்ளது. தெற்கு வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உள்ளது. இது தாழ்வு மண்டலம் ஆகும். இது போக இலங்கை கடல் அருகே காற்று சுழற்சி உள்ளது. அதேபோல் அரபிக்கடல் பகுதியில் ஒரு சுழற்சி உள்ளது. இவை எல்லாம் பெல்ட் போல செயல்படுகின்றன. இவை மழை மேகங்களை கடலோர மாவட்டங்களை நோக்கி நகர்த்தி வருகிறது.
புயல் மழை: கிழக்கில் இருந்து காற்றை தூண்டிவிட்டு மழையை பெய்ய வைக்கிறது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு தென்மேற்கு வங்கக்கடலில் வந்து.. தமிழ்நாடு கரையோரம் அருகே வரும். அப்போது அதிக மழை பெய்யும்.
சில சமயங்களில் ஒரே நேரத்தில் பல சுழற்சிகள் இருக்கும். இப்போது அப்படிதான். இது பெரிய சலனம். அதற்கு உள்ளே மூன்று சுழற்சிகள் உள்ளன. மூன்று சுழற்சிகள் வேறு வேறு இடத்தில் உள்ளன. அதில் ஒரு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வு மையமாக வலுப்பெற்று புயலாகிறது . இது வழக்கமாக நடக்கும் விஷயம்.
பல சுழற்சிகள் ஏற்பட்டு ஒன்று புயலாக மாறும். அப்படித்தான் இப்போதும் நடக்கிறது. 3 சுழற்சிகள் சேர்ந்து வந்தது.. அதில் ஒன்று புயலாக மாறுகிறது. அதுதான் மழைக்கும் காரணமாக மாறியுள்ளது, என்று வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை












Click it and Unblock the Notifications