புயலை விடுங்க.. அதன் ரூட்தான் பெரிய சிக்கலே.. சென்னைக்கு மிக்ஜாம் வைத்த பெரிய மார்க்.. கவனம்
சென்னை: சென்னையை மிக்ஜாம் புயல் தாக்கினாலும்.. தாக்கவில்லை என்றாலும் கண்டிப்பாக இன்று மிக கனமழை பெய்யும் என்கிறார்கள். இதற்கு புயலின் ரூட்தான் முக்கியமான காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை போன்ற நகர்ப்புற இடங்களில் மழை எதிர்பார்த்ததுதான். ஒரு சில வானிலை மாடல்கள் இதை காட்டிக்கொண்டுதான் இருந்தது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.. இந்த மழை மேகங்கள் கடலில் இருந்து கிழக்கு டூ மேற்கு திசையில் நகரும் போது மழை பெய்யும். மழை மேகங்கள் இப்படி நகரும் போது சூடு காரணமாக வலிமை அடையும்.

இந்த வலிமை காரணமாகவே சென்னையில் நகர்ப்புற பகுதிகளில் மழை பெய்கிறது. சென்னையின் நகர்ப்புற பகுதிகளில் கனமழை பெய்ய இது முக்கிய காரணம். வடக்கு, மேற்கு புறநகர் பகுதிகளில் கனமழை பெய்ய இதுவே முக்கியமான காரணம்.
வானிலை மையம் கணித்ததை விட அதிக மழை பெய்துள்ளது. தெற்கு வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உள்ளது. இது தாழ்வு மண்டலம் ஆகும். இது போக இலங்கை கடல் அருகே காற்று சுழற்சி உள்ளது. அதேபோல் அரபிக்கடல் பகுதியில் ஒரு சுழற்சி உள்ளது. இவை எல்லாம் பெல்ட் போல செயல்படுகின்றன. இவை மழை மேகங்களை கடலோர மாவட்டங்களை நோக்கி நகர்த்தி வருகிறது. கிழக்கில் இருந்து காற்றை தூண்டிவிட்டு மழையை பெய்ய வைக்கிறது.
மேலும் மழை இருக்கிறது: இதுவரை பெய்த மழையை விட இனிமேல் பெய்ய போகும் மழைதான் அதிக கவனம் பெறுகிறது. ஏனென்றால் இனிமேல் பெய்ய போகும் மழை இன்னும் மோசமானதாக இருக்கும் என்கிறார்கள். சென்னையை மிக்ஜாம் புயல் தாக்கினாலும்.. தாக்கவில்லை என்றாலும் கண்டிப்பாக இன்று மிக கனமழை பெய்யும் என்கிறார்கள். இதற்கு புயலின் ரூட்தான் முக்கியமான காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த புயல் படிப்படியாக மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு தென்மேற்கு வங்கக்கடலில் வந்து.. தமிழ்நாடு கரையோரம் அருகே இன்று வரும். அப்போது அதிக மழை பெய்யும். இந்த படத்தில் கூறப்பட்டு உள்ளதுதான் புயலின் ரூட். அதில் இன்று இரவு ஒரு கட்டத்தில் புயல் சென்னைக்கு மிக அருகில் உள்ளது. சென்னைக்கு மிக அருகில் வரப்போகிறது.
ரொம்ப சிக்கல்: தெற்கு ஆந்திராவை நோக்கி சென்றாலும் புயலின் ஒரு பகுதி சென்னைக்கு மிக அருகே இருக்கும். அந்த நொடிதான் சென்னைக்கு புயலின் நேரடி ஆபத்து இருக்கும் . மழை மட்டுமின்றி கடினமான காற்றும் வீசும். சுமார் 80 கிமீ வேகம் வரை கூட வீசும். புயலை விட அது போக போகும் ரூட்தான் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதன் பாதை காரணமாக.. கண்டிப்பாக சென்னைக்கு மிக தீவிர கனமழை இன்று பெய்யும். சில சமயங்களில் ஒரே நேரத்தில் பல சுழற்சிகள் இருக்கும். இப்போது அப்படிதான். இது பெரிய சலனம். அதற்கு உள்ளே மூன்று சுழற்சிகள் உள்ளன. மூன்று சுழற்சிகள் வேறு வேறு இடத்தில் உள்ளன. அதில் ஒரு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வு மையமாக வலுப்பெற்று புயலாகிறது . இது வழக்கமாக நடக்கும் விஷயம்.
அதில் புயலாக மாறிய சிஸ்டம்தான் சென்னைக்கு அருகே இன்று வர உள்ளது. இது மிக அதிக மழை மேகங்களை சென்னையை நோக்கி தள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications