சுத்தி சுத்தி அட்றா அட்றா.. 8 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! சென்னையிலும் இடி மின்னல் இருக்கு
சென்னை: தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் மிதமான மழை பெய்யலாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், "இன்று வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூலை 14 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்
அடுத்த 24 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
மரக்காணம் (விழுப்புரம்) 5, கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி), மேட்டூர் (சேலம்), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), RSCL-கேதார் (விழுப்புரம்), லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), மேலூர் (மதுரை), லக்கூர் (கடலூர்), ஆர்எஸ்எல்- சூரப்பட்டு (விழுப்புரம்), பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி) தலா 3, ஆயின்குடி (புதுக்கோட்டை), துவாக்குடி இம்தி (திருச்சி), தாளவாடி (ஈரோடு), திருமானூர் ( அரியலூர்), காரையூர் (புதுக்கோட்டை), கிளாசெருவை (கடலூர்), வால்பாறை PTO (கோவை), சின்னகளார் (கோவை), வம்பன் AWS (புதுக்கோட்டை), திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்), செங்கம் (திருவண்ணாமலை), அறந்தாங்கி (புதுக்கோட்டை), RSCL- அவலூர்பேட்டை (விழுப்புரம்), கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி), கல்லக்குடி (திருச்சி), அய்யம்பேட்டை (அய்யம்பேட்டை), தஞ்சாவூர்), முதுகுளத்தூர் (ராமநாதபுரம்), கூடலூர் பஜார் (நீலகிரி), அருப்புக்கோட்டை (விருதுநகர்), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), வல்லம் (தஞ்சாவூர்), பாரூர் (கிருஷ்ணகிரி) தலா 2, வேப்பூர் (கடலூர்), குடிமியான்மலை (புதுக்கோட்டை), மேல் கூடலூர் (நீலகிரி), நெய்வாசல் தென்பதி (தஞ்சாவூர்), சின்கோனா (கோயம்புத்தூர்), ஆர்எஸ்எல் வல்லம் (விழுப்புரம்), ஆர்எஸ்எல்- வளவனூர் (விழுப்புரம்), மீ மாத்தூர் ( கடலூர் , செய்யூர் (செங்கல்பட்டு), பார்வூட் (நீலகிரி), மதுராந்தகம் (செங்கல்பட்டு), ஆர்எஸ்எல்- ஆனந்தபுரம் (விழுப்புரம்), நீடாமங்கலம் (திருவாரூர்), திருப்பத்தூர் (திருப்பத்தூர்), புலிப்பட்டி (மதுரை), RSCL நெமூர் (விழுப்புரம்), உதகமண்டலம் (நீலகிரி), பஸ்ல் முகையூர் (விழுப்புரம்), தேவாலா (நீலகிரி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), சின்னார் அணை (கிருஷ்ணகிரி), பாம்பார் அணை (கிருஷ்ணகிரி), சோலையார் (கோவை), விழுப்புரம், நடுவட்டம் (நீலகிரி), கிளென்மார்கன் (நீலகிரி), ஹரிசன் மலையாள லிமிடெட் (நீலகிரி), புதுக்கோட்டை (புதுக்கோட்டை), நாகுடி (புதுக்கோட்டை), தொழுதூர் (கடலூர்), சூளகிரி (கிருஷ்ணகிரி), ராயக்கோட்டா (கிருஷ்ணகிரி), திருச்சி, நன்னிலம் (திருவாரூர்), சேத்பேட்டை (திருவண்ணாமலை), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), டேனிஷ்பேட்டை (சேலம்), ஆர்எஸ்எல்- கஞ்சனூர் (விழுப்புரம்), திருவையாறு (தஞ்சாவூர்) , தனிமங்கலம் (மதுரை), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), புடலூர் (தஞ்சாவூர்), சேலம் (சேலம்), ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), கும்பகோணம் (தஞ்சாவூர்), புள்ளம்பாடி (திருச்சி), எருமப்பட்டி (நாமக்கல்) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: வங்கக்கடல் பகுதிகளில் இன்று முதல் ஜூலை 16 ஆம் தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இன்றும் நாளையும் வட தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
14.07.2023: இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
15.07.2023, 16.07.2023: இலங்கைய ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகளில் இன்று வடக்கு கேரள- கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகள், இலட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை மற்றும் ஜூலை 14ல் கேரள- கர்நாடக கடலோரப்பகுதிகள், இலட்சத்தீவு பகுதிகள், மாலதீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
15.07.2023: வடக்கு கேரள- கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல், இலட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
16.07.2023: வடக்கு கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்." என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications