இன்னைக்கு இல்லை.. நாளைக்குதான் புயல் கரையை கடக்குதாம்! அப்டேட் கொடுத்த தமிழ்நாடு வெதர்மேன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக்கடலில் உருவாகியிருந்த ஃபெஞ்சல் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் அது நகரும் வேகம் குறைந்துள்ளதால் நாளைதான் கரையை கடக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

புயல் உருவானதிலிருந்து அது நகரும் வேகத்தில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் மிகவும் மெதுவாகவும், சில சமயங்களில் ஓரளவு வேகத்துடனும் நகர்ந்து வந்தது. குறிப்பாக புயலுக்கு முந்தைய நிலயான காற்றழுத்த தாழ்வு மண்டலம், வங்கக்கடலில் நங்கூரம் இட்டதை போல நின்று கொண்டிருந்தது. இதனால் இது புயலாக மாற வாய்ப்பே இல்லை என்று கூட சொல்லப்பட்டது. ஆனால் பின்னர்தான் புயலாக மாறியது.

cyclone fengal weather weatherman

இப்படி இஷ்டத்திற்கு மாறி வந்த ஃபெஞ்சல் புயலின் நிலையை கணிப்பதில் தொடர்ந்து துல்லியத்தன்மை குறைந்து வருகிறது. இப்படி இருக்கையில் வெதர்மேன் புயல் நாளை கரையை கடக்கும் என்று கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+