இந்த ஏரியா பக்கம் மட்டும் போயிடவே போயிடாதீங்க.. தமிழ்நாடு வெதர்மேனின் முக்கிய வானிலை வார்னிங்
சென்னை: தமிழ்நாடு வானிலை குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியமான அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளார்.
தமிழ்நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக மழை காலம் தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் கோடை காலம் முடிவிற்கு வந்து உள்ளது. கடந்த மாதங்களில் வாட்டி வதைத்துக்கொண்டு இருந்த கடுமையான வெயில் ஒரு வழியாக முடிவிற்கு வந்துள்ளது. வெயிலின் தாக்கம் குறைந்து கொஞ்சம் கொஞ்சமாக மழை பெய்ய தொடங்கி உள்ளது.

கேரளாவில் மழை காலம் காரணமாக மழை பிச்சு எடுத்துக்கொண்டு இருக்கும் நிலையில் தமிழ்நாட்டிலும் மேற்கு மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கி உள்ளது. அந்த வகையில் இன்று தமிழ்நாட்டின் வானிலை எப்படி இருக்கும், மழைக்காலம் எப்படி இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு வெளியிட்டு உள்ளார்.
சென்னையில் இன்றும் வானம் மேகமூட்டத்துடன் உள்ளது. நேற்று போலவே இன்றும் நாள் மேகமூட்டத்துடன் தொடங்கி உள்ளது. வங்கக்கடலின் மேலே உள்ள வளிமண்டல புயல் சுழற்சி காரணமாக இரவு நேரங்களில் வட தமிழ்நாட்டில் இடியுடன் மழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக வால்பாறை பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.அதேபோல் மேற்கு மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சியை ஒட்டி இருக்கும் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் செய்துள்ள போஸ்டில், கேரளா, வால்பாறை, கர்நாடகா கடலோரப் பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைகளிலும் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது
நீலகிரியில் அவலாஞ்சி பகுதியில் 184 மி.மீ மழை பெய்து உள்ளது. வால்பாறையில் சின்னக்கல்லாறு 147 மி.மீ. மழை பெய்து உள்ளது. பெரியாறு நீர்பிடிப்பு பகுதியிலும் கனமழை பெய்து வருகிறது. இன்றும் நாளையும் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்கு பயணங்கள் செல்வதை தவிர்க்கவும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் செய்துள்ள போஸ்டில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது மழை என்று குறிப்பிட்டு உள்ளனர். இன்று மட்டுமல்ல அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று குறிப்பிட்டு உள்ளனர்.
அதன்படி ஜூலை 8ம் தேதி வரை மழை வெளுக்க போகிறது. இன்று நீலகிரி, கோவை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. அதேபோல் திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். மேலும் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
கோவையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வந்தது. அதேபோல் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய போகிறது. மாறாக சென்னையில் மழை பெய்யாது. ஆனாலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரத்திற்கு உள்ளே ஒரு சில இடங்களில் சாரல் மழை மாலை நேரத்திற்கு மேல் பெய்யலாம்.
ஆனால் பரவலாக வெயில் இல்லாத வானிலையே காணப்படும் என்று இந்திய வானிலை மையம் தான் வெளியிட்ட அறிவிப்பில் கூறி உள்ளது.












Click it and Unblock the Notifications