வட சென்னையை சுத்துப்போட்ட மேகங்கள்.. இடி, மின்னலுடன் வெளுக்கும் மழை! வெதர்மேன் விளக்கம்
சென்னை: டிட்வா புயல் வலுவிழந்து சென்னைக்கு அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டிருந்தது. இது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழந்திருக்கிறது. இருப்பினும் சென்னைக்கு தீவிரமான மழையை கொடுத்து வருகிறது. இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கமளித்துள்ளார்.
அவர் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "கனமழையை கொண்டு வரும் மேக கூட்டங்கள் வட சென்னை, பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம் மற்றும் புழல் பகுதிகளில் மாட்டிக் கொண்டிருக்கிறது. எனவேதான் கனமழை கொட்டி தீர்த்திருக்கிறது. மேகங்கள் மிகவும் அடர்த்தியானதாகவும், தீவிரமானதாகவும் இருக்கின்றன. இதுவும் கனமழைக்கான காரணம்.

ஏற்கெனவே வடசென்னையில் அதிக அளவில் மழை கொட்டி தீர்த்திருக்கிறது. 100 மி.மீக்கும் அதிகமான அளவில் மழை பெய்திருக்கிறது. இந்நிலையில் காலை 8.30 மணிக்கு மேல் 150 மி.மீக்கும் அதிகமான அளவில் மழை கொட்டும். மறுபுறம் தென் சென்னையில் மழையின் தாக்கம் குறைவாகவே இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு, தச்சூர், சோழவரம், செங்குன்றம், புழல், கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. கனமழை காரணமாக புழல் ஏரியில் நீர் வரத்து அதிகரித்திருக்கிறது. எனவே ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications