சென்னைவாசிகளே.. வெயில் அப்படியே மறைஞ்சிடும்! ஜூன் 2ம் தேதி டமால், டுமீல்! வெதர்மேன் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் பட்டையை கிளப்பி வரும் நிலையில், ஜூன் 2ம் தேதி முதல் வெயில் குறையும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு கோடை மிக கடுமையாக இருந்தது. இந்த ஆண்டு அதே போல இருக்கும் என்று பயந்த நிலையில், வெயில் எதிர்பார்த்ததை போலவே தீவிரமாக இருந்தது. வழக்கமாக வட மாவட்டங்களை சுட்டெரிக்கும் வெயில் இந்த முறை கொங்கு மாவட்டங்களையும் சேர்த்து பதம் பார்த்தது. வேலூரை விட ஈரோட்டில்தான் அதிகம் வெயில் பதிவாகியிருந்தது.

Weather Sunny Chennai Tamil Nadu Weatherman

இப்படி இருக்கையில் மே மாதம் தொடக்கத்தில் வானிலை அப்படியே மாறியது. தென் மாவட்டங்களில் முதலில் தலையை காட்டிய மழை, பின்னர் வட மாவட்டங்களையும் நனைக்க தொடங்கியது. குறிப்பாக வேலூர், திருப்பத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. சென்னையில் பெரிய அளவில் மழை இல்லை என்றாலும், வட மாவட்டங்களில் மழை பெய்ததால் சென்னையில் ஓரளவு வெயில் குறைந்து காணப்பட்டது.

இது மே மாதமா அல்லது அக்டோபர், நவம்பர் மாதமா என்கிற அளவில் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. எனவே சென்னை மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருந்தனர். இப்படி இருக்கையில் நேற்று சென்னையில் வெயில் 106 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் வெயில் அதிகமாக பதிவானது சென்னையில்தான்.

இந்நிலையில் வரும் ஜூன் 2ம் தேதி முதல் சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் வெயில் குறைவாக இருக்கும் என்று தனியார் வானிலை ஆர்வலரான பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து தனது x தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "கடந்த சில தினங்களாக மீனம்பாக்கம் மற்றும் நுங்கம்பாக்கத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. ஜூன் 2ம் தேதி முதல் வெப்பம் குறையும். ஜூன் 1 முதல் வட தமிழகத்தில் டமால் டுமீல் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வெப்பம் ஜூன் 1 வரை இருக்கும்" என்று கூறியுள்ளார்.

முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம், "தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் துவங்கக்கூடும்.

எனவே இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழகத்தில்
ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூன் 1 மற்றும் 2ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருச்சிராப்பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சுனமழை பெய்யவாய்ப்புள்ளது.

ஜூன் 3 மற்றும் 4ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெப்பநிலையை பொறுத்த அளவில், இன்று அதிகபட்ச வெப்பநிலை, தமிழகத்தில் ஒருசில பகுதிகளில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை விட 2-3 செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

நாளை தொடங்கி ஜூன் 2ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் (1-2- செல்சியஸ்) சற்று குறைந்து, இயல்பை ஒட்டியும்/இயல்பை விட சற்று அதிகமாகவும் இருக்கக்கூடும்" என தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+