இன்று பிற்பகல் நடக்கும் முக்கிய நிகழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட செம வார்னிங்.. நோட் பண்ணுங்க
சென்னை; தமிழ்நாட்டில் ஆங்காங்கே கனமழை பெய்து வரும் நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியமான் வானிலை எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
இன்று காலையில் இருந்து தமிழ்நாட்டில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்துள்ளது. முக்கியமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் இருந்து மழை பிச்சு எடுத்துக்கொண்டு இருக்கிறது.
வானிலை மையம்: இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், 1. இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல மேடுக்கு சுழற்சி நிலவுகிறது.
2. தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
03.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் டி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம். தூத்துக்குடி, திருநெல்வேலி கன்னியாகுமரி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
04.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

04.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோயம்புத்தூர். திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிய இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
06.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர்.. திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரி இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
07.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர். திருப்பூர். தேனி, திண்டுக்கல், விதுைநகர், மதுரை. தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரி இடங்களில் பெய்யவாய்ப்புள்ளது. கனமழை
08.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
09.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை அட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும், என்று கூறியுள்ளது.

வெதர்மேன் பிரதீப் ஜான்: தமிழ்நாட்டில் ஆங்காங்கே கனமழை பெய்து வரும் நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியமான் வானிலை எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில், சென்னை, பாண்டிச்சேரி, காரைக்கால் நோக்கி மேகங்கள் நகர்ந்து வருகிறது. நாகப்பட்டினம் - கடலோர மாவட்டங்கள் முழுக்க மேகங்கள் நகர்ந்து வருகிறது. இங்கே எல்லாம் மழை விட்டு விட்டு பெய்யும். பிற்பகல் நேரத்தில் வெயில் காரணமாக நிலப்பகுதி வெப்பம் ஆகும்.
அப்போது மேகங்கள் உள்நோக்கி செல்லும். உள்மாவட்டங்களில் மேக கூட்டம் உருவாகும். கிழக்கு காற்று மூலம் எப்படி மழை பெய்யும் இயல்பான மழையாக இது இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications