குட்டிப் புலி வெடிய போடு.. மழைக்கு 90% சான்ஸ்! ஆர்சிபியன்ஸ்க்கு ஷாக் கொடுத்த தமிழ்நாடு வெதர்மேன்..!
பெங்களூரு: ஐபிஎல் 2024 சீசனின் இன்று நடக்கும் லீக் போட்டியில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள் மோதும் நிலையில், அங்கு 90% சதவீதம் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார். இதன் காரணமாக சென்னை ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் செல்வதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளதாக கூறுகின்றனர் ரசிகர்கள்.
கர்நாடகாவில் வரும் 5 நாட்களுக்கு கனமழைக்கும், மே 20, 21 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ள நிலையில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளான குடகு, மைசூரு, மாண்டியா உட்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மிக முக்கியமாக இன்று மழை பெய்யுமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. காரணம் இன்று நடைபெறும் ஐபிஎல் லீக் போட்டியில் பெங்களூரு-சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் கடும் நெருக்கடிகளுக்கு மத்திய பெங்களூரு அணி களமிறங்குகிறது.
ஆர்சிபி-சிஎஸ்கே: சிஎஸ்கே -ஆர்சிபி என இரு அணிகளுக்குமே வாழ்வா சாவா போட்டியாக இந்த போட்டி அமைந்துள்ள நிலையில் இதில் வெற்றி பெற்றால் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். ஆனால் ஆர்சிபிக்கு தான் பல சிக்கல்கள் இருக்கிறது. ஆர்சிபி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அல்லது 11 பந்துகள் மீதம் வைத்தோ வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும்.
ரசிகர்கள் ஆர்வம்: இதன் காரணமாக ஆர்சிபி ரசிகர்களும், சிஎஸ்கே ரசிகர்களும் வெகு ஆர்வத்துடன் இந்த போட்டியை எதிர்நோக்கி வருகின்றனர். தற்போது பெங்களூருவில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட்டை விடுத்துள்ளது. இதன் காரணமாக போட்டி ரத்தானாலும் சிஎஸ்கே எளிதாக அடுத்த சுற்றுக்கு சென்று விடும் இதனால் ஆர்சிபி ரசிகர்கள் கோலியை மட்டுமல்லாது வானிலையையும் நம்பி இருக்கின்றனர்.
பெங்களூரு மழை: இந்நிலையில் பெங்களூருவில் காலையில் வானிலை நன்றாக இருப்பதாகவும் மழை பெய்வதற்கான அறிகுறி இல்லை என ரசிகர் ஒருவர் பதிவிட்டு இருந்தார். அவருக்கு பதில் அளித்துள்ள தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இன்று 90 சதவீதம் பெங்களூருவில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியிருக்கிறார். இதுகுறித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரசிகர் ஒருவர்,"பெங்களூரில் இறங்கி விமான நிலையத்திலிருந்து வீட்டிற்கு வந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது. ஆரஞ்சு, ஆப்பிள் மற்றும் பைன் ஆப்பிளைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன். ஆனால் எங்கும் மழைக்கான அறிகுறியையே காணவில்லை என கிண்டலாக பதிவிட்டிருந்தார்.
தமிழ்நாடு வெதர்மேன்: இதற்கு பதிலளித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்,"இடியுடன் கூடிய மழை எப்படி நிகழ்கிறது என்பது பற்றி சிலருக்குத் தெரியாது. காலை நேரங்களில் தெளிவான வானம் இருக்கும் போது அது மாலையில் எப்போதும் மழைக்கு அச்சுறுத்தலாக இருக்கும். காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், மாலையில் அதிக மழை பெய்யாது." என கூறியுள்ளார்.
90% வாய்ப்பு: மேலும் அவரது மற்றொரு பதிவில்," பெங்களூரைச் சுற்றி மாலை/இரவில் இடியுடன் கூடிய மழை ஏற்படுவதற்கு கிட்டத்தட்ட 90% வாய்ப்பு உள்ளது எனவும், காற்றின் முறை மிகவும் சாதகமாக இருப்பதால், புயல்களின் நேரம் முக்கியமானது என்பதோடு, சின்னசாமி மைதானத்தின் வடிகால் அமைப்புகள் போட்டியை தீர்மானிக்கும் என கூறியுள்ளார். இதன் காரணமாக இன்று பெங்களூருவில் மழை பெய்வது உறுதி என்றே வானிலை ஆய்வு நிபுணர்கள் கணித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications