சென்னையில் மழை.. இன்றிரவு வெளுக்க போகுது.. காஞ்சி, அரக்கோணத்துக்கு தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய தகவல்
சென்னை: சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்று இரவு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் நல்ல மழை பெய்து வருகிறது.. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது... இதனிடையே, தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருக்கிறது..

6 நாட்களுக்கு மழை: இது தொடர்பாக வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை முதல் 22ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியிருந்தது.
வானிலை மையம்: அதேபோல, அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான், மழை பற்றிய முக்கிய அறிவிப்பு குறித்து தன்னுடைய சோஷியல் மீடியாவில் ஷேர் செய்துள்ளார். அதில், சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்திலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிபேட்டை மாவட்டங்களில் இன்று இரவு நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது..
அடுத்த ரவுண்டு: தென்மேற்கு பருவமழை சற்று குறைந்த நிலையில், ஜூலை 21ம் தேதி முதல் அடுத்த ரவுண்டு மழை பெய்ய போவதாகவும், அதுவும் இந்த முறை மும்பை பகுதிகளில், பலத்த மழைக்கு சான்ஸ் இருக்கிறது.. தெலங்கானாவிலிருந்து குஜராத் வழியாக பருவமழை நகரும்பட்சத்தில், மும்பை, ஹைதராபாத் போன்ற 2 மெட்ரோ நகரங்களில் பலத்த மழை இருக்கும். கிருஷ்ணா மற்றும் கோதாவரி படுகையில் அதிகளவில் மழை இருக்கும்..
அதேபோல, காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை இருக்கும். கேரளாவிலும், கேரளாவின் வடக்கு பகுதியில் கனமழை இருக்கும். பலத்த மழை இல்லாவிட்டாலும், இந்த வாரம் இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று பிரதீப்ஜான் பதிவிட்டுள்ளார்.
இணையவாசிகள்: இன்று இரவு மழை என்ற தகவலால் குளிர்ந்துபோன இணையவாசிகள், நல்ல தகவல் சொன்னதற்கு நன்றி என்று கமெண்ட் செய்துள்ளனர். மேலும் சிலர், மேற்குவங்கம், பீகார், ஜார்க்கண்ட், ஒரிஸ்ஸாவிலும் மழை இருக்குமா? என்று வெதர்மேனிடம் சந்தேகம் கேட்டு வருகிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications