பெங்கல் புயல் வருது.. சென்னை டூ டெல்டா.. தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய வார்னிங்.. நோட் பண்ணுங்க
சென்னை: தமிழ்நாட்டில் இன்று பெய்ய உள்ள மழை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விடுத்த எச்சரிக்கையை, நான் முன்பே கொடுத்த வானிலை கணிப்புகளில் எந்த மாற்றம் இல்லை. இன்று டெல்டா முதல் சென்னை வரை பகல்/இரவு நேரங்களில் மிதமான மழை பெய்யும். பகலில் குளிர்ந்த காற்று அதிகம் வீசும். நன்றாக என்ஜாய் செய்யவும்.

29 முதல் தீவிர மழை தொடங்கி 30ம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, புதுச்சேரி, கடலூர் மற்றும் விழுப்புரம் கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும். டிசம்பர் 1 மற்றும் 2ல் ஃபுல் எபெக்ட் காரணமாக மழை பெய்யலாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் 12 மணிக்கு உள்ளாக இன்று மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்!
சென்னை
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
திருவள்ளூர்
விழுப்புரம்
கடலூர்
மயிலாடுதுறை
நாகப்பட்டினம்
திருவாரூர்
தஞ்சாவூர்
புதுக்கோட்டை
அரியலூர்
பெரம்பலூர்
சிவகங்கை
ராமநாதபுரம்
நீலகிரி
கோவை
கள்ளக்குறிச்சி
திருச்சி
தென்காசி
விருதுநகர்
மதுரை
தூத்துக்குடி
திருநெல்வேலி
கன்னியாகுமரி
தமிழ்நாடு வானிலை மைய அறிவிப்புப்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மற்றும் புதுக்கோட்டை இடங்களில் கனமழை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் மழை பெய்யவாய்ப்புள்ளது.
கரையை கடக்கும்: இந்த புயல் தமிழ்நாட்டில் கரையை கடக்கும் என்பது உறுதியாகி உள்ளது. இது மிஸ்ஸாக வாய்ப்பே இல்லை. சரியாக 30ம் தேதி வடதமிழ்நாட்டில் கரையை கடக்கும்.
இந்த புயலின் கண் உருவாகவில்லை என்றாலும் தாழ்வு மையத்தின் கண் போன்ற மையம் உருவாகி வருகிறது. இது வலுவாக இருக்கிறது. சென்னையில் இருந்து சுமார் 900 கிமீ தூரத்தில் கண் உள்ளது. அதன் புகைப்படங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன. ஆனால் புயல் கண்ணுடன் இருக்குமா.. கண்ணை கொண்டு இருக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த ஒரு விஷயம்தான் இப்போது வரை கேள்வியாக உள்ளது.
நாகையில் இருந்து தெற்கு தென்கிழக்கு திசையில் 590 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக வலிமை அடைந்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கனமழை பெய்யும். நகரின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.












Click it and Unblock the Notifications