அக்வான் புயல் எங்கே போனால் நமக்கு என்ன? "இங்கு" கரையை கடந்தால் சென்னைக்கு செம மழை! வெதர்மேன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அக்வான் புயல் நெல்லை அருகே கரையை கடக்கும் என தெரிகிறது. இது நெல்லூருக்கு தெற்கே எங்கு கரையை கடந்தாலும் சென்னைக்கு அதிகளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: அக்வான் புயல் நாளை உருவாக போகிறது. இது நாள் வரை இந்த புயல் எங்கே கரையை கடக்கும் என்பது குறித்து தெளிவற்ற நிலை இருந்தது. புயல் கரையை கடக்க 4 நாட்களுக்கு மேல் இருப்பதால் மேலும் தெளிவு பெற நாளை வரை காத்திருக்கலாம்.

Cyclone Akvan

புயல் எங்கு போனால் நமக்கென்ன, மழைதான் முக்கியமானது. புயல் நெல்லூர் அல்லது அதற்கு தெற்கு பகுதியில் கரையை கடப்பதுதான் சென்னையில் மழை பெய்ய சாதகமாக இருக்கும். இன்னும் கொஞ்சம் தெற்கே இறங்கினால் செமையாக இருக்கும்.

புயல் நெல்லூருக்கு அருகே கரையை கடக்கும்போதெல்லாம் சென்னைக்கு மிக சிறந்த மழையை கொடுத்துள்ளது. இதற்கு சிறந்த உதாரணம் 2023 ஆம் ஆண்டு நெல்லூர் அருகே கரையை கடந்த மிக்ஜாம் புயல்! நெல்லூர் அல்லது அதற்கு கீழ் நோக்கி வந்து கரையை கடந்தால்தான் சென்னைக்கு நல்ல மழை கிடைக்கும்.

நெல்லூருக்கு மேலே அதாவது வடக்கு பகுதியில் கரையை கடந்தால் சென்னைக்கு மழை கிடைக்காது. இந்த அக்வான் புயல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு பலனை கொடுக்கும். ராணிப்பேட்டையும் இந்த லிஸ்டில் இணைந்தால் இணையும். ஆனால் மற்ற மாவட்டங்களுக்கு பெரிய அளவில் மழை இருக்காது. இவ்வாறு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+