திஸ் இஸ் ஓபீனிங்! யூ சி தி என்டிங்! சென்னையில் 10 நாளுக்கு டமால் டூமீல் மழைதான்! வெதர்மேன் அப்டேட்
சென்னை: சென்னையில் நேற்று மாலை நல்ல மழை பெய்த நிலையில் இரண்டாவது நாளாக விடிய விடிய மழை கொட்டி தீர்த்துள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அடுத்தடுத்த எக்ஸ் வலைதள பக்க பதிவுகளில் கூறியிருப்பதாவது : தமிழகத்திற்கும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கும் என்னா ஒரு சிறப்பான நாள்! சென்னையில் நேற்று மாலை கனமழை கொட்டித் தீர்த்தது, அது போல் நள்ளிரவு தொடங்கி விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.

இது தொடக்கம்தான், இனி டமால் டுமீல் மழையானது தமிழகம் முழுவதும் தொடரும். இன்று வெயில் வரும், அதன் பிறகு மேகங்கள் வலுவிழக்கும், மழையும் குறைந்துவிடும். இன்று காலை 6 மணி நிலவரப்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் எங்கெல்லாம் எவ்வளவு மழை பதிவாகியுள்ளது என்பதை பார்க்கலாம்.
சோழிங்கநல்லூர்- 119 மி.மீ.
கேளம்பாக்கம் 103
அடையாறு- 101
எண்ணூர் - 92
திருவொற்றியூர்- 89
கத்திவாக்கம்- 87
கிண்டி0 86
செம்பரம்பாக்கம்- 80
கொளத்தூர்- 79
ஸ்ரீபெரும்புதூர்- 74
ஆலந்தூர்- 73
காஞ்சிபுரம்- 70
அண்ணாநகர் மேற்கு- 68
தேனாம்பேட்டை- 64
மணலி- 62
நியூ மணலி டவுன் - 61
கோடம்பாக்கம்- 59
ஐஸ் ஹவுஸ்- 60
அம்பத்தூர்- 56
முகலிவாக்கம்- 56
வில்லிவாக்கம்- 56
திருவேற்காடு-55
உத்தண்டி- 54
மதுரவாயல்- 48
திருவிக நகர்- 47
புழல்- 45
வளசரவாக்கம்- 45
மீனம்பாக்கம்- 34
நுங்கம்பாக்கம்- 44
மடிப்பாக்கம்- 43
குன்றத்தூர்- 41
மாம்பாக்கம்- 40
சோமங்கலம்- 40
பெருங்குடி- 40
அது போல் அவர் நேற்றைய பதிவில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரத்திலிருந்து சென்னை வரை சிவப்பு தக்காளிகள் சூழ்ந்துள்ளன. எனவே நீண்ட நாள் கழித்து கனமழை பெய்யும். அடுத்த 10 நாட்களுக்கு இப்படித்தான் இருக்கும். அடர்ந்த மேகங்கள் தஞ்சை, அரியலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் நுழைந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதலே கனமழை பெய்து வருகிறது. சென்னை முகப்பேர், அமைந்தகரை, கோயம்பேடு, ஈக்காட்டுத்தாங்கல், ராமாபுரம், மதுரவாயல், வளசரவாக்கம், விருகம்பாக்கம், பூந்தமல்லி, திருவேற்காடு, குன்றத்தூர், மாங்காடு, பட்டாபிராம், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இந்த நிலையில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை விடிய விடிய மழை பெய்தது. சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது. கிண்டி, அடையாறு, மயிலாப்பூர், வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், அண்ணாசாலை, மந்தவெளி, லஸ், கோயம்பேடு, திநகர், முகப்பேர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
அது போல் புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, ஆவடி, அனகாபுத்தூர், குன்றத்தூர், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 5.30 மணி நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக நெய்வேலியில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அது போல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. செம்பரம்பாக்கம், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தலா 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு?












Click it and Unblock the Notifications