இன்று எங்கெல்லாம் டமால் டுமீல் மழை! சென்னை உள்பட வடதமிழகத்தின் நிலை என்ன? வெதர்மேன் கணிப்பு!
சென்னை: சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இரவு முதல் நாளை காலை வரை இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய பகுதிகளிலும், வேலூர், ராணிப்பேட்டை உள்பட உள் மாவட்டங்களிலும் இன்று வெப்பச்சலனத்தால் மழை பெய்யும். இந்த மழை இன்று இரவும் நாளை காலையும் நீடிக்கும்.

இடியுடன் கூடிய மழையே பெய்யும். காஞ்சிபுரம் , செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் டமால் டுமீல் மழை இருக்கும் என்றும் அவை மக்கள் ரசிக்கும்படியாகவே இருக்கும் என்றும் அச்சப்படுத்தும் வகையில் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவான நிலையில் சென்னையில் கடந்த திங்கள்கிழமை இரவு முதல் அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை வரை அதிக கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. தாழ்வான இடங்களில் உள்ள மக்கள் பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. இந்த நிலையில் ஏற்கெனவே வடிகால்கள் தூர்வாரப்பட்டதால் மழை பெய்த ஒரு மணி நேரத்தில் சாலையில் தேங்கிய தண்ணீர் வடிந்துவிட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்றைய தினமும் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது.
காற்றழுத்தமானது சென்னை- புதுவை இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் காற்றின் திசை மாறுபாடு காரணமாக காற்றழுத்தமானது தெற்கு ஆந்திராவை நோக்கி சென்றது. இதனால் திருப்பதி, ராயலசீமா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் நேற்று சென்னைக்கு கொடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் நீக்கப்பட்டது.
இதையடுத்து நேற்றைய தினம் மழை ஒரு சொட்டு கூட இல்லாமல் வெயில் இருந்தது. அதே வேளையில் இன்றைய தினம் வெப்பச்சலனத்தால் மழை பெய்யக் கூடும் என கணிக்கப்பட்டது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஆர்.கே.பேட்டையில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில்தான் நாளையும் மழை இருக்கும் என்கிறார்கள்.
சென்னையில் இன்று அதிகாலை முதலே முகப்பேர், அண்ணாநகர், எம்ஆர்சி நகர், பட்டினப்பாக்கம், மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்த வண்ணம் இருந்தது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் சென்னையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications