2023 ரொம்ப முக்கியம்! தமிழ்நாடு வெதர்மேன் சென்னைக்கு சொன்ன முக்கிய அப்டேட்.. நோட் பண்ணுங்க!
சென்னை: 1976, 1985, 1996, 2005, 2015 மற்றும் 2023 - ஆகியவை சென்னைக்கு வெள்ளமான வருடங்கள்- சென்னை சிட்டியில் 2000 மிமீ மழை இந்த வருடம் பெய்துள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. சென்னை கால்வாய்கள் எல்லாம் நிரம்பிவிட்டன. இதனால் மழை நீர் வடிகால் அமைப்புகள் இருந்தும் கூட தண்ணீர் வெளியேறும் வழி இல்லாமல் உள்ளது. தண்ணீர் ரிவர்ஸ் ஆக கூடாது என்பதால் வடிகால்கள் தற்போது மூடப்பட்டு உள்ளன. இதனால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது.
சென்னையை உலுக்கிய மிக்ஜாம் புயல் தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியமான விவரங்களை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் போஸ்ட்: அவர் செய்துள்ள போஸ்டில், 1976, 1985, 1996, 2005, 2015 மற்றும் 2023 - ஆகியவை சென்னைக்கு வெள்ளமான வருடங்கள்- சென்னை சிட்டியில் 2000 மிமீ மழை இந்த வருடம் பெய்துள்ளது.
நுங்கம்பாக்கத்தில் 48 மணி நேரத்தில் (230 மற்றும் 239 மிமீ) 469 மிமீ மழை பதிவாகியுள்ளது. இதில் பெரும்பாலானவை ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள் இரவு வரை 24 மணி நேரத்தில் பதிவான மழை. முழு நகரமும் 400-500 மிமீ மழையைப் பெற்றது, இதில் பெரும்பாலானவை 24 மணி நேரத்தில் பெய்தது.
ஆவடி மோசமான மழை: ஆவடி மிக மோசமான மழையை பதிவு செய்துள்ளது. அங்கு 564 மிமீ (276 மற்றும் 278 மிமீ) ஆகும். பூந்தமல்லி பகுதியில் 483 மிமீ (141 மற்றும் 342 மிமீ) மழை பெய்துள்ளது இதனால், மேல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கூவம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
தாம்பரம் 409 மி.மீ (173 மற்றும் 236 மி.மீ) அடையாறு ஆற்றின் மேல் நீர்ப்பிடிப்பில் மழை பெய்துள்ளது. அடையாறு ஆறும் நிரம்பி வழிகிறது. 3-வது கொசஸ்தலையாற்றில் வந்து கரைபுரண்டு ஓடுகிறது. பூண்டியில் இருந்து ஒரு கட்டத்தில் 45000 கனஅடி திறந்து விடப்பட்டது.
( அடுத்த 10 நாட்கள்.. சென்னைக்கு மிக தேவையான குட் நியூஸ்.. வானிலை வல்லுனர் சொன்ன சூப்பர் அப்டேட்! )
இந்த மழையின் அனைத்து வரலாற்று புள்ளிவிவரங்களையும் வழங்க முயற்சி செய்கிறோம். மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து ஆண்டுகளுடன் 2023ம் ஆண்டும் கண்டிப்பாக நினைவில் இருக்கும், என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வானிலை மைய கணிப்பு: தமிழ்நாடு வானிலை தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள கணிப்பில், 06.12.2023 மற்றும் 07.12.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
08.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
09.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இடங்களில் கனமழை ஓரிரு பெய்யவாய்ப்புள்ளது.
10.12.2023 மற்றும் 11.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications