செஞ்சுரியை தாண்டிடுச்சு.. புரட்டி எடுத்த மழை.. இன்று என்ன நடக்கும்? தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நேற்று பெய்த மழை குறித்தும், இன்றைய வானிலை குறித்தும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் போஸ்ட் செய்துள்ளார். சென்னையில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. சென்னையில் இரவு முழுக்க மழை பெய்தும் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை.

சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி, திருவொற்றியூர், எண்ணூர், தேனாம்பேட்டை, அசோக் நகர், வடபழனி, அண்ணா சாலை, மெரினா கடற்கரை ஆகிய இடங்களில் மழை பெய்தது. அதேபோல் சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது.

Tamil Nadu Weatherman warning on Heavy rain thunderstorm in many parts of Chennai

நேற்று இரவு முழுக்க மழை பெய்தாலும் இங்கே பெரிதாக தண்ணீர் தேங்கவில்லை. ஒரு சில சுரங்க பாதைகளில் லேசாக தண்ணீர் தேங்கினாலும் அவை உடனே வடிந்தது.

சென்னையில் நேற்று பெய்த மழை குறித்தும், இன்றைய வானிலை குறித்தும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் போஸ்ட் செய்துள்ளார். அவர் செய்துள்ள போஸ்டில், நேற்று திருத்தணி 125 மி.மீ மழையை பெற்றுள்ளது. பூண்டி அணை விரைவில் நிரம்ப வேண்டும். தாம்பரம் 108 மி.மீ. பெற்றுள்ளது.

இன்று மற்றொரு பிரகாசமான மற்றும் சூரிய வெளிச்சம் நாள், நாம் நேற்று நடந்ததை போன்ற வானிலை மாற்றத்தை, மழையை மீண்டும் இன்று பார்க்கலாம் . வட தமிழக மாவட்டங்களான சென்னை, திருவள்ளூவர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் பிற மாவட்டங்களிலும் இன்று பரவலாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இன்று கடலூர் முதல் டெல்டா பெல்ட் வரை உள்ள பகுதிகளும் இந்த லிஸ்டில் சேரும், என்றுள்ளார்.

வானிலை அறிவிப்பு: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 23.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Tamil Nadu Weatherman warning on Heavy rain thunderstorm in many parts of Chennai

24.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

25.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

26.09.2023 மதல் 29.09.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+