குறிச்சு வச்சுக்கிறேன்.. இந்த மாதம் வானிலை வேற மாதிரி இருக்கும்.. அடித்து சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்
சென்னை: நவம்பர் மாதம் இந்திய வானிலை ஆய்வு மையம் சொன்னது போல அல்லாமல் மழை நிலவரம் வேறுமாதிரியாக இருக்கும், என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அடித்து சொல்லி இருக்கிறார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது. அதன் தாக்கம் காரணமாக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடலில் வலுவான வடகிழக்கு காற்று வலுப்பெற்ற பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்கியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கூறியது.

புயல் உருவானது: அதன்படியே மத்தியமேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த தாழ்வு பகுதி நேற்று காலை ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஹாமூன் புயலாக வலுப்பெற்று அதன்பின் கரையை கடந்தது.
வானிலை மையம் எச்சரிக்கை: இந்த நிலையில்தான் தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அடுத்த ஒரு வாரத்திற்கு தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எச்சரிக்கை: இந்த நிலையில்தான் நவம்பர் மாதம் மழை நிலவரம் இந்தியா முழுக்க நார்மலாக இருக்கும். தமிழ்நாட்டில் இயல்பை விட குறைவாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆனால் இதை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் மறுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், இதை குறித்து வைத்துக்கொள்கிறேன்! இந்திய வானிலை ஆய்வு மையத்தின் படி நவம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் இயல்பை விட குறைவாக மழை பெய்யும் என்று கூறியுள்ளது. ஏற்கனவே அக்டோபர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.
ஆனால் இந்த நவம்பர் மாதம் இந்திய வானிலை ஆய்வு மையம் சொன்னது போல அல்லாமல் மழை நிலவரம் வேறுமாதிரியாக இருக்கும், என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அடித்து சொல்லி இருக்கிறார்.
வானிலை நிலவரம்: முன்னதாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில்., வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 31.10.2023 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுனா, விருதுநகர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
01.11.2023 மற்றும் 02.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்| இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
03.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், இண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
04.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தார் மாவட்டத்தின் மலைப்பகுதிகள். நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
05.11.2022 மற்றும் 06.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications