இன்னும் 3 டிகிரி வெயில் அதிகரிக்கும்.. மழைக்கான வாடையே இல்லை! வறண்ட வானிலை தொடரும் என அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 6 நாட்கள் வறண்ட வானிலையே நிலவும் என்றும், சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்தே மழை குறைந்து வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் அடுத்த 6 நாட்கள் மழை பெய்யாது என்றும், வெப்ப நிலை அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "பிப்ரவரி 17 ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 18 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும்.

ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும். உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் பிப்ரவரி 23 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 32 - 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்ப நிலை 22 - 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டி மீட்டரில்): ஏதுமில்லை.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: பிப்ரவரி 17 ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 18 ஆம் தேதி தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்." என்று குறிப்பிடப்பட்டு உள்லது.












Click it and Unblock the Notifications