சென்னையில் இன்றும் தாம் தூம்னு மழை பெய்யும்.. அக்டோபர் 4 வரை இதே ஸ்டேட்டஸ்தான்.. வெதர்மேன்
சென்னை: சென்னையில் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி வரை மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வடக்கு அந்தமான், மியான்மர் கடற்கரை பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வளி மண்டல சுழற்சி இன்று உருவாகிறது. அது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது.

வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைய வாய்ப்புள்ளது. வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைய வாய்ப்புள்ளது.
இதனால் தமிழகத்தில் இரு தினங்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில்தான் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. மதுரவாயல், வளசரவாக்கம், வானகரம், திருவேற்காடு, பூந்தமல்லி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, கே.கே.நகர், ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை நேற்றைய தினம் பெய்தது.
இதனால் பலத்த காற்று வீசியது. நகரில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்தது. பெட்ரோல் பங்க் கூரை பிய்த்து கொண்டு போகும் அளவுக்கு காற்று பலமாக வீசியது. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நேற்றைய தினம் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது.
தென்மேற்கு பருவகாற்று வரலாற்றில் அதிக மழை நேற்று பெய்துள்ளது. இந்த மழை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வரும் அக்டோபர் 4ஆம் தேதி வரை மழை பெய்யும் என வெதர்மேன் தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை காலத்தில் சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கத்தில் பெய்த மழையின் அளவையும் வெதர்மேன் ஒப்பீடு செய்துள்ளார்.
மீனம்பாக்கம் (ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழையின் அளவு):
2023 ஆம் ஆண்டு 902 மி.மீ.
1996 ஆம் ஆண்டு 871 மி.மீ.
1995 ஆம் ஆண்டு 782 மி.மீ.
1967 ஆம் ஆண்டு 723 மி.மீ.
1985 ஆம் ஆண்டு 720 மி.மீ.
1961 ஆம் ஆண்டு 714 மி.மீ.
நுங்கம்பாக்கம் (கடந்த 210 ஆண்டுகளில்)
1996 ஆம் ஆண்டு 1155 மி.மீ.
1870 ஆம் ஆண்டு 860 மி.மீ.
2011 ஆம் ஆண்டு 853 மி.மீ.
1961 ஆம் ஆண்டு 737 மி.மீ.
1892 ஆம் ஆண்டு 735 மி.மீ.
2023 ஆம் ஆண்டு 731 மி.மீ.
1988 ஆம் ஆண்டு 717 மி.மீ.
இவ்வாறு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications