வீக் எண்டில் வெளியே போறீங்களா.. இங்கெல்லாம் மழை பெய்யும்.. கவனம்! தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட்
சென்னை: கடந்த சில நாட்களாகவே தலைநகர் சென்னையில் நல்ல மழை பெய்து வரும் நிலையில் இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
இந்தியாவில் பல்வேறு இடங்களிலும் கடந்த சில மாதங்களாகவே கனமழை கொட்டி வருகிறது. அதேநேரம் தமிழ்நாட்டில் பெரியளவில் மழை இல்லாமலேயே இருந்தது. இருப்பினும், கடந்த சில நாட்களாக நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டி வருகிறது. அதிலும் குறிப்பாகச் சென்னை மற்றும் வட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. ஒரு பக்கம் வெயிலும் அதிகமாக இருந்து சென்னைவாசிகளை கிளைமேட் வைத்துச் செய்கிறது என்றே சொல்லலாம்.
வெதர்மேன்: இதற்கிடையே இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில், "கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக அடையாறு சுற்றுச்சூழல் பூங்காவில் தான் அதிகபட்ச மழைப் பதிவாகியுள்ளது. இன்றும் கடும் வெயில் இருக்கும் அதே நேரத்தில்.. காஞ்சிபுரம் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் தான் மீண்டும் ஹாட் ஸ்பாட்டாக அமையப் போகிறது.
ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் சென்னையின் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இது கிட்டதட்ட அன்றாட நிகழ்வாகிவிட்டது.. மதுரையில் 11-12 நாட்கள் தொடர் மழை பெய்து வந்த நிலையில், அது இப்போது தான் சற்று குறைந்துள்ளது.
மழை: தென் மேற்கு பருவமழையால் அதிக மழை பெய்து வருகிறது. முன்பு ஜூன் மாதத்தில், அதிகபட்ச வெப்ப நாட்கள் பதிவான நிலையில், மழையும் கூட வழக்கத்திற்கு மாறாக அதிகமாகவே இருந்தது. அதேபோல இப்போது ஆகஸ்ட் மாதமும் மழை கொட்டி வருகிறது" என்று அவர் பதிவிட்டுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் எங்கே எந்தளவுக்கு மழை பெய்துள்ளது என்பது குறித்த தகவல்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இந்த லிஸ்ட்டை பார்த்தாலே சென்னையில் எந்தளவுக்கு மழை அதிகமாகக் கொட்டியுள்ளது என்பது நமக்குத் தெளிவாகத் தெரியும். தமிழ்நாட்டில் அதிக மழை என்று எடுத்துக் கொண்டால் டாப் 10இல் 7 சென்னையில் தான் இருக்கிறது. அதிகபட்சமாக அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா ஜோன் 13இல் 66மிமீ மழை பெய்துள்ளது. அடையாறு சுற்றுச்சூழல் பூங்காவில் தான் அதிகபட்ச மழை கொட்டியுள்ளது. அடுத்து டிஜிபி அலுவலகத்தில் 54% மழை கொட்டியுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
வீக் எண்ட்: மேலும், நெட்டிசன் ஒருவர் வார இறுதி நாட்களில் சென்னையில் மழை இருக்குமா என்பது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், மழை இருக்கும் என்று பதிலளித்துள்ளார். அதாவது சென்னையில் வார இறுதி நாட்களில் மழை இருக்கும்.. எனவே, இந்த வீக் எண்டை எங்காவது வெளியே செல்ல பொதுமக்கள் பிளான் செய்தால்.. மழை இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு அதற்கேற்ப பிளான் செய்து கொள்ளுங்கள்.
முன்னதாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டிருந்தது. அதேபோல சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications