சம்பவம் செய்ய போகும் கனமழை! ஒட்டுமொத்த தென் தமிழகத்திற்கும் அலர்ட்! அப்போ சென்னை? வெதர்மேன் நறுக்
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்து வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும். எங்கே மழை பெய்யும்.. எங்கே மழை பெய்யாது என்பது குறித்து முக்கிய தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பகிர்ந்துள்ளார்,
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகப் பரவலான இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் பெரியளவில் மழை இல்லை என்ற போதிலும் தென் தமிழகத்தில் பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

இப்போது வங்கக் கடலில் புதிய புயல் உருவாகியுள்ள நிலையில், இதனால் வரும் நாட்களிலும் நல்ல மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
வெதர்மேன்: இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்னை (நுங்கம்பாக்கம் 86 மி.மீ., மீனம்பாக்கம் 39 மி.மீ.) 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு மிக மோசமான அக்டோபர் மழை பொழிவை நோக்கி நோக்கிச் செல்கிறது. அடுத்த ஒரு வாரத்திற்குச் சென்னைக்கு வங்காள விரிகுடாவில் இருந்து பெரிதாக எதுவும் இருக்காது" எனப் பதிவிட்டுள்ளார். மேலும், அத்துடன் கடந்த 10 ஆண்டுகளில் அக். மாதம் சென்னையில் எந்தளவுக்கு மழை பெய்துள்ளது என்பது குறித்த தகவல்களையும் பகிர்ந்துள்ளார்.
கடந்த 10 ஆண்டு தரவுகளை வைத்துப் பார்க்கும் போது அக். மாதத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு தான் அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளது. அந்தாண்டு அக். 9ஆம் தேதி அதிகபட்சமாக 37.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. அதேபோல 2016இல் 36.9 டிகிரி செல்சியஸ் வெப்பமும் 2018இல் 36.4 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகி இருக்கிறது. குறைந்தபட்ச வெப்பம் என்றால் கடந்தாண்டு 22.2 டிகிரி வரை வெப்பம் குறைந்துள்ளது.
மழை பொழிவு: அதேபோல மழை பொழிவைப் பொறுத்தவரைக் கடந்த 10 ஆண்டுகளில் 2014ஆம் ஆண்டில் தான் அதிகபட்ச மழை கொட்டி தீர்த்துள்ளது. அந்தாண்டு அக். மாதம் சென்னையில் மட்டும் 405 மிமீ மழை பெய்துள்ளது. அதேபோல 2019, 2020 ஆண்டுகளிலும் தீவிர மழை சென்னைக்குக் கிடைத்துள்ளது. அந்த ஆண்டுகளில் முறையே 318.2 மற்றும் 318.6 மீமீ மழை பெய்துள்ளது. கடந்தாண்டு வெறும் 171 மிமீ மழை மட்டுமே பெய்த நிலையில், இந்தாண்டும் மழை பொழிவு மோசமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
தமிழ்நாடு வெதர்மேன் தனது மற்றொரு ட்விட்டர், "அதேநேரம் தெற்கு தமிழ்நாடு, அதிலும் குறிப்பாகக் கன்னியாகுமரி, தெற்கு கேரளா பகுதிகளில் தொடர்ந்து இடியுடன் கூடிய மழை பெய்யும்" என்று பதிவிட்டுள்ளார். அதாவது சென்னைக்கு அடுத்த ஒரு வாரத்திற்குப் பெரிய மழை இருக்காது என்ற போதிலும், தென் தமிழகத்தில் நல்ல மழை பெய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
வானிலை மையம்: இன்று தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications