தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க முடியுமா? சென்னையில் எந்த தேதியில் மழை ஆக்டிவ்வாக இருக்கும்? வெதர்மேன்
சென்னை: சென்னையில் வரும் 15 ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை பலத்த மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் தற்போது குளிர்ச்சியாக இருந்து வருகிறது. சென்னையில் சனிக்கிழமை முதலே அவ்வப்போது திடீர் என மழை பெய்து வருகிறது.

காலையில் வெயில் வருகிறது. பிறகு அப்படியே வானிலை மாறிவிடுகிறது. காலை முதலே குளிர் நிலவுகிறது. இந்த நிலையில் நவம்பர் மாதம்தான் மழை ஆக்டிவ்வாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருப்பதாவது: தமிழகத்திற்கு இன்று எந்த மாதிரியான நாள் தெரியுமா. ஒரே நாளில் தமிழகத்தில் 15 முதல் 20 மி.மீ. மழை கூடுதலாக பெய்திருக்கும். ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள் எவை தெரியுமா?
சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, பெங்களூர், திருப்பத்தூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. வரும் 10 ஆம் தேதி வரை தமிழகத்தில் வளிமண்டல சுழற்சியால் மழை பெய்யும். வரும் 11 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை மழை சற்று ஓய்வெடுக்கும்.

பிறகு வரும் 14 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சியால் மழை பெய்யும். சென்னையில் இந்த மேலடுக்கு சுழற்சியால் 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை கனமழை பெய்யும். இந்த நவம்பர் மாதமும் டிசம்பர் முதல் 15 தேதிகள் வரை மழை ஆக்டிவ்வாக இருக்கும். தற்போது உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது அரபிக் கடலுக்குள் நகர்ந்து குறைந்த காற்றழுத்தமாக உருவாகும்.

வைகை அணையில் அதிகமான தண்ணீர் நிரம்பியுள்ளது, அது போல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அணைகளும் நிரம்பிவிட்டன. கோவை மாவட்ட அணையின் அளவுகளும் அதிகரித்து வருகின்றன. பெண்ணை ஆறு கிட்டதட்ட நிரம்பும் நிலையில் இருக்கிறது. மேட்டூர் அணையில் மட்டும்தான் பிரச்சினை. அடுத்த சில தினங்களில் அந்த மேட்டூருக்கு நீர் வரத்து வரும். எனினும் மேட்டூர் அணை இந்த ஆண்டு இறுதியில் பற்றாக்குறையுடனே இருக்கும். இவ்வாறு வெதர்மேன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நவம்பர் 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications