கேட்டதை விட கூடுதலாகவே கிடைத்துவிட்டது! சாதித்த மீனம்பாக்கம்! 26 ஆண்டுகள் கழித்து ரெக்கார்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மீனம்பாக்கத்தில் தென்மேற்கு பருவமழையின் போது ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்த மழையின் அளவுகளில் இந்த ஆண்டு அதிக மழை பெய்து 26 ஆண்டு கால சாதனையை முறியடித்துவிட்டது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tamilnadu Weatherman says that Meenambakkam might break the record of 1996

இன்று முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது.

நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மாலை வேளையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

அந்த வகையில் நேற்றைய தினம் மாலை இடியுடன் கூடிய மழை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் பெரும் இன்னல்களை சந்தித்தனர். இந்த நிலையில் இந்த மழை இன்றும் தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நேற்றைய தினம் சென்னை முழுக்க கனமழை பெய்தது. அது போல் தென் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் இந்த மழை பெய்தது. அண்ணா நகரில் பிச்சி பெடல் எடுத்தது. சென்னை விமான நிலையத்தில் இதுவரை பெய்த தென்மேற்கு பருவமழை யில் பெய்த மழையின் அளவை நேற்று பெய்த மழை முறியடித்திருக்கும்.

தென்மேற்கு பருவமழை காலத்தில் மீனம்பாக்கத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரை பல்வேறு காலகட்டங்களில் பெய்த மழையின் அளவுகளை பார்ப்போம். 1996ஆம் ஆண்டு 871 மி.மீ., 2023 ஆம் ஆண்டு 877 மி.மீ. இதுதான் மேற்கண்ட காலத்தில் முதல் அதிக மழை அளவு. அது போல் 1995 ஆம் ஆண்டு 782 மி.மீ., 1967 ஆம் ஆண்டு 723 மி.மீ., 1985 ஆம் ஆண்டு 720 மி.மீ., 1961 ஆம் ஆண்டு 714 மி.மீ. மழை பெய்தது. இவ்வாறு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

1996ஆம் ஆண்டு சாதனையை முறியடிக்க மீனம்பாக்கத்திற்கு 11 மி.மீ மழைதான் தேவைப்பட்டது. அது நேற்று பெய்த மழையில் கிடைத்திருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது கிடைத்துவிட்டது. 11 மி.மீ விட கூடுதலாகவே கிடைத்துவிட்டது. எனவே மீனம்பாக்கத்தில் தென்மேற்கு பருவமழையின் போது அதிகமாக பெய்த மழையின் அளவானது 1996 ஆம் ஆண்டாக இருந்த நிலையில் தற்போது அந்த சாதனையை 2023 ஆம் ஆண்டு பெய்த மழை முறியடித்துவிட்டது. இந்த மாதம் முடிய இன்னும் 6 நாட்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+