தமிழகத்திலேயே "இந்த 2 ஊர்" தான் செம ஹாட்! நாளை சென்னையில் வெயில் எப்படியிருக்கும்? வெதர்மேன் அப்டேட்
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் ஆகியவைதான் தமிழகத்தில் இன்று அதிக வெப்பமான இடங்களாக அறியப்படுகிறது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: நுங்கம்பாக்கத்தில் 40.6 டிகிரி சென்டிகிரேட்டும், மீனம்பாக்கத்தில் 40.6 டிகிரி சென்டிகிரேட்டும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் இன்று அதிக வெப்பமான பகுதிகள் என்றால் அவை இந்த இரண்டும்தான்.

நாளையும் பாரம்பட்சம் இல்லாமல் வெயில் தகிக்கும். இந்த ஆண்டின் முதல் முறையாக நுங்கம்பாக்கத்தில் 40 டிகிரி வெப்பநிலையை தாண்டியுள்ளது. இதற்கு முன்பு 39 டிகிரி சென்டிகிரேட்டாக கடந்த மே 1 ஆம் தேதி இருந்தது.
கடந்த 2004 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் 40 டிகிரி சென்டிகிரேட்டைவிட குறைவாக வெப்பம் மே மாதம் இருந்தது தற்போது கனவாகிவிட்டது. இத்தனைக்கு நுங்கம்பாக்கத்தை ஒப்பிட்டால் மீனம்பாக்கம் கடற்கரையிலிருந்து தூரமாகத்தான் இருக்கிறது, இதற்கே 40 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் அதிகரித்துள்ளது. இவ்வாறு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று காலை அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் இன்று வெயில் கடுமையாக இருக்கும். செம்ம ஹாட் நாளாக இருக்க போகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் இன்று சில இடங்களில் வெயில் 42 டிகிரி செல்ஸியஸ் வரை கூட செல்லும்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் ஹீட் வேவ் இருக்கும். ராணிப்பேட்டை , வேலூரிலும் ஹீட் வேவ் இருக்கும். தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் ஹீட் வேவ் இருக்காது. கன்னியாகுமரியில் பெரிய அளவில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.
Nunga 40.6C (Hottest day of the year) and Meena 40.6C (2nd Hottest day of the year).
— Tamil Nadu Weatherman (@praddy06) May 27, 2024
These 2 are the hottest in Tamil Nadu today. Tomorrow will be no different.
வானிலை மைய எச்சரிக்கை: 27.05.2024 முதல் 31.05.2024 வரை; தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யவாய்ப்புள்ளது. அடுத்த சில தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: 27.05.2024 டூ 29.05.2024: அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2-3° செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும்.
27.05.2024: அடுத்த 24 மணி நேரத்திற்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பாகவும்/இயல்பை விட சற்று குறையக்கூடும்.
27.05.2024: அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.
27.05.2024 முதல் 29.05.2024 வரை: அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பாகவும் / இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகள்: 25.05.2024 முதல் 27.05.2024 வரை: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications