மதுரை டூ சென்னை வரை.. 13 இடங்களில் சதமடித்த வெயில்.. அதிகபட்சமாக 106 டிகிரி.. எங்கேன்னு பாருங்க
சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வெயில் கடுமையாக சுட்டெரித்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பத்தால் மக்கள் பரிதவித்து வருகிறார்கள். நேற்றும் தமிழகத்தில் 13 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. மதுரை விமான நிலையத்தில் மட்டும் 106.16 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. எனினும் நேற்று மாலை நேரத்துக்கு பிறகு சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது.
தமிழகத்தில் மேற்கு திசை காற்று மாறுபாடு காரணமாக ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. எனினும் கடந்த ஒரு வாரமாக அளவுக்கு அதிகமாக வெயிலின் அளவு இருந்து வருகிறது. ஏப்ரல் மே மாத கிளைமேட் தான் நிலவுகிறதோ என்று நினைக்கும் அளவுக்கு வெயில் அனலாக தகித்து வருகிறது.

சுட்டெரித்த வெயில்
குறிப்பாக மதியம் நேரங்களில் வெயில் கடுமையாக சுட்டெரிக்கிறது. வெளியில் சென்றவர்கள் வியர்வையிலேயே குளிக்கும் அளவுக்கு வெப்பம் அனலாக தகித்து வருகிறது. வரும் நாட்களிலும் வெயிலின் அளவு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும், ஒரு சில இடங்களில் வெயிலால் அசவுகரியம் ஏற்படலாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இதற்கிடையே நேற்று மட்டும் தமிழகத்தில் 13 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 106 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. சென்னையில் மீனம்பாக்கம், நுங்கம்பாகத்தில் அதிகபட்சமாக 102 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
வெயில் அளவு:
* மதுரை விமான நிலையம் - 106.16 டிகிரி செல்சியஸ் - (41.2 பாரன்ஹீட்)
* மதுரை நகரம் - 104.36 - (40.2)
* சென்னை மீனம்பாக்கம் - 102.74 - (39.3)
* சென்னை நுங்கம்பாக்கம் - 102.56 - (39.2)
* தூத்துக்குடி - 102.56 - (39.2)
* நாகப்பட்டினம் - 101.84 (38.8)
* வேலூர் - 101.66 - (38.7)
* ஈரோடு - 101.48 - (38.6)
* திருத்தணி - 101.3 - (38.5)
* கடலூர் - 100.58 - (38.4)
* திருச்சி - 100.58 - (38.4)
* கரூர் - 100.4 - (38)
* தஞ்சாவூர் - 100.4 - (38)
வானிலை மையம் எச்சரிக்கை:
09-07-2025 முதல் 10-07-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. 09-07-2025 முதல் 10-07-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
09-07-2025 முதல் 10-07-2025 வரை: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3" செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசெளகரியம் ஏற்படலாம் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
மழையும் பெய்ய வாய்ப்பு
வெயில் ஒருபுறம் சுட்டெரித்து வந்தாலும், மறுபுறம் அவ்வப்போது ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை கூட காஞ்சிபுரம், சென்னை புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. வரும் நாட்களிலும் தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வரும் 14 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications