வெப்பம் இன்னும் அதிகரிக்குமாம்..வானிலை அறிக்கையே இவ்வளவு வறட்சியா இருக்கே! கோடைக்கு முன்பே கொதிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் வெப்ப நிலை அதிகரித்து அசௌகரியமான சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே கோடைக்கு இணையாக வெப்பம் வாட்டி வதைக்க தொடங்கி இருக்கிறது. வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து விடுபட கோடை மழை எப்போது பெய்யும் என மக்கள் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம். அதில் மழை என்ற வார்த்தையே இல்லை. முழுக்க முழுக்க வறண்ட வானிலை, வெப்பம் தொடர்பான தகவல்களே இடம்பெற்று உள்ளன.

இன்று வெளியாகி இருக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது, “மார்ச் 13 ஆம் தேதி முதல் மார்ச் 19 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும்.
அதிகபட்ச வெப்ப நிலை பற்றிய முன்னறிவிப்பு: மார்ச் 13 ஆம் தேதி மற்றும் மார்ச் 14 ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும். மார்ச் 13 ஆம் தேதி முதல் மார்ச் 17 ஆம் தேதி வரை: அதிக வெப்ப நிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 34 - 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்ப நிலை 25 - 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஏதுமில்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை. மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்.” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications